பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/457

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
437


கொத்தின் மேல் பசுந்தழை இருப்பதையும் இணைத்து மகளிரது கதுப்பாகவும் காட்டினார். அஃதாவது கூந்தலில் பதித்து தொங் கும் இழையாம். இவ்வாறு கொத்தில் தொடர்ந்து பூத்திருப்பதால், 'பொன் தொடர்ந்தன்ன தகைய நன்மலர்ச் கொன்றை ஒள்ளினர் கோடுதொறுத் துரங்க' -எனப் பொன் தொடராகப் பாடினார் இளவேட்டனார். இத்தொடரை யும் பொன்மாலையாக்கி, நாண்மலர்க் கொன்றையும் பொலந்தார் போன்றன".2 -என்று கேசவனார் பாட, அதனையொட்டிப் பாவேந்தர் பாரதிதாசனார், ' கொன்றை பூத்த தங்கக் கோவை தென்றலால் ஆடும்'8 -எனத் தங்கக் கோவையாக்கினார். இத்தங்கக் கோவையின் தொங்கலில் பதக்கம் ஒன்று தொங்க வேண்டாவோ? அப்பதக்கமும் ஒரு தங்கக் காசாக இருப்பின் அழகன்றோ? ஆம் பூங்கொத்தில் முனையில் உள்ள போது பொன் காசு போன்றிருக்கும். போது என்பது மலரும் பக்குவத்தில் சற்று வாய்பிளந்திருக்கும் அன்றோ? அதனால் தவளைவாய் போன்று சற்றே திறந்துள்ள கிண்கிணி என்னும் சதங்கையைக்காட்டி, "தவளைவாய் பொலஞ்செய் கிண் கினிக் காசின் அன்ன போது ஈன் கொன்றை' யாக வண்ணிக்கப் பட்டது. இஃது இளங்கீரந்தையார் கைவண்ணம். பேயனாரால் ஒரு பொன் கொட்டிவைத்த பேழை காட்டப் பட்டுள்ளது: "கவலைக் கிழங்கு தோண்டி எடுத்ததால் ஓர் அகன்ற குழி. அதில் கொன்றையின் ஒளிவிடும் பூக்கள் வீழ்ந்து நிறைந்திருக்கின்றன. இத்தோற்றம் பொன்னைப் பெய்து வைத்த பேழை திறந்து வைத்தது போன்று உள்ளது" இப் பேழையைக் காட்டும் பாட்டு இது: k 1 நற் : 221 : 3, 4 2 լք : 14 : 10 8 குயில் பாட்டு : குன்று ர்ப் பாட்டு : 187, 188. 4 குறுந்:148 2, 3