பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/469

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
449


இவ்வாறு கொன்றைக்காயின் பயனின்மையும் பேசப் பட்டது எனவே காயால் கொன்றைக்கு இசைத்துறை தவிர வேறு சிறப்பில்லை. இம்மரத்தின் கிளையாவது யாழ் செய்வதற்குப் பயன்பட்டது. இம்மரம் இந்தியாவில் பரவலாக இடம்பெற்றது. (pār (5.53533LTsiro INDIAN LABURNUM arson, QLuff பெற்றது. ஆயினும் செடியியலார் சயாம் நாட்டில் உள்ள இவ்வினப்பெருக்கத்தைக் கருதிப்போலும் சயாம் மரம்' SIAMESE TREE srssri, G.513 roll_srti. இப்பூவின் சிறப்பு கருதி நேபாளத்தார் மரங்களில் இதனை மன்னனாகக் கொண்டு அரச மரம்' என்னும் பொருளில் 'இராச விருட்சம்’ என்று வழங்குகின்றனர். கொன்றைப் பூவின் தோற்றம் முதல் திறைவு வரை ஒரு வரிசைப்படுத்தினால், கழற்சிக்காய் போன்ற மொட்டு; பொன் வட்டுக்காய் போன்ற போது; மாலைபோன்ற கொத்து மலர்: மடல் மடலாய்த் தனிமலர்; கூந்தல் போன்ற காய்; இவற்றை இரண்டு துளையுடைய நெற்று -என அமையும். வரிகளில் வடித்தார் கணிமேதையார்: 'கழலாகிப் பொன்வட்டாய்த் தாராய் மடலாய்க் குழலாகிக் கோல்கரியாய்க் கூர்ந்து"1 இது கொன்றையின் வரலாற்றுச் சுருக்கம். 1 திணை. நூ : 98 : 8, 4" 崇 2. 9