பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/480

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
460


மலரும். முதன்முதலாகப் பூக்கும் இப்பூ "தலையலார்’ எனப் படும். இதனை, இலையில் அஞ்சினை இனவண் டார்ப்ப முகைபேர் மென்முகை அவிழ்ந்த கோங்கின் தலையலர் வந்தன’’ -எனப் பார்காப்பான் என்னும் புலவர் பாடிக் காட்டினார். இக்கோங்கைப் போன்றே இலவமும்: -

இலயில மலர்ந்த முகையில் இலவம்’ (அகம் : 1.1 . 3)

இலையில மலர்ந்த ஒங்குநிலை இலவம்’ o (ஐங்குறு : 338 : 2) என்றபடி இலைகள் உதிர்ந்த பின் மலர்வதாகும். இலையுதிர் ஆலர்ச்சியால் இவை இரண்டும் ஒன்றுபடுத்திப் பேசப்படும். மேலும் இரண்டும் பாலை நில மலர். இலக்கியங்களில் அடுத் தடுத்து இடம் பெற்றவை. இரண்டிலும் பஞ்சு தோன்றும் என்ற ஒரு கருத்து உண்டு. அது ப்ொருந்துவதாக இல்லை. கோங்கின் வண்ணனைகளாக கருத்துகளாக வழங்கும் தமிழ் இலக்கியங்களில் எவ்வொரு இடத்திலேனும் கோங்கிற் பஞ்சு உண்டு எனப்படவில்லை. ஒரு சிறு குறிப்பும் இல்லை. இக்கருத்து எவ்வாறு எழுந்தது என்பதை இலவத்தின் கருத்து விளக்கத்தில் காணவேண்டும். மேற்காட்டப்பட்ட சில ஒற்றுமைகளால் நண்பர்களாகிய இவை இரண்டும் மறு சில வகை வேறுபாடுகள் கொண்டவை. இவ்வேறுபாடுகளால் கோங்கிற்கு மாறாக இலவம் குறிக்கப் பட்டது. பருவம் இல்லாத கோங்கம் என்று பாடியபரிபாடல் அடுத்து இலவத்தை வைத்து, r "பருவமில் கோங்கம் பகைமலர் இலவம்’’2 -என்று பகை மலராக இலவத்தைக் குறித்தது. எவ்வகையில் பகை? கோங்க மலரின் நிறம் மஞ்சள்; 1 குறுந்: 254 : 1-8 2 புரி ; 19 : 79