பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

476


"குலவு மணல் அடைகரை நின்ற புன்னை' (குறு : 236 :34) "ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னை’’ (குறு : 311 : 5) என்பன கொண்டும் இதன் கரைவளர் நிலையை அறியலாம். கடற்கரையில் இடம் பெற்றதால் கிழக்கிலிருந்து வீசும் கடற்காற்றால் நாள்தோறும் தாக்கப்படும். இத்தாக்குதலால் இதன் கிளைகள் மேற்கு நோக்கி வளைந்து வளரும்: இதனிலும் கவனம் வைத்த பிசிராந்தையார். புன்னை பூத்த இன்நிழல் உயர்கரை மேக்குயர் சினை' - என மேற்றிசை நோக்கி உயர்ந்து வளர்ந்துள்ளதைக் குறித்தார். நெய்தல் நலப் பறவை யாகிய நாரைகள் மேற்கு நோக்கிய கிளைகளிலேயே பாதுகாப் பாகத் தம் இருப்பிடங்களைக் கொண்டன. மற்றொரு புலவரும், "கருங்கோட்டுப் புன்னை குடக்கு (மேற்கு) வாங்கு பெருஞ்சினை' - என மேற்கு நோக்கி வளைந்துள்ளதைப் பாடினார். இந்நிலைகொண்டும் நோக்கும் போது நெய்தல் நிலத்திற் குரிய மர வகைகளில் புன்னை உரிமையான இடம்பெற்றதாகின் றது. மேலே கண்டுள்ள முக்கூட்டாகிய மூன்றிலும் புன்னையே இலக்கியங்களில் மிகுதியான இடத்தைப் பெற்றுள்ளது. அதிக இடத்திலும் அகநானூற்றில் ஒரு வியப்பான அமைப் பைப் பெற்றுள்ளது. 25 பாடல்களில் இடம் பெற்றுள்ளது. அப் பாடல்களின் எண்கள் பின்வருபவை. அகநானூற்றுப் பாடல் எண்கள்: . . 10, 20, 30, 40, 45, 70, 80, 100, 106, 145, 175, 180, 190, 1 நற் 91 ; 2 3. 2 நற் : 187 : ,