பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/500

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
480


அலைந்த முத்து மாலை அறுந்து முத்துகள் சிதறிக்கடத் கரை மணலில் பரவிக்கிடந்தன. அப்பக்கம் போவோர் வரு வோர் முத்துகளைப் புன்னையரும்போ முத்தோ என்று. மயங்கிப் பேதுற்றனராம்' இச்சுவைக் கருத்தை வழங்கும் பாடல் : 'முன்னைத்தம் சிற்றில் முழங்கு கடலோதம் மூழ்கிப் போக அன்னைக் குரைப்பன் அறிவாய் கடலே என்றலறிப் பேரும் தன்மை மடவார் தளர்ந்துகுத்த வெண்முத்தம் தயங்கு கானல் புன்னையரும் பேய்ப்பப் போவாரைப் பே துறுக்கும் புகாரே எம்மூர்' ஒரு பாடலையே ஓரிலக்கியமாகப் படைத்தவர் எவரோ அறியோம் என்று நாம் பேதுற வேண்டியுள்ளது. இவ்வாறே பேதுற வைக்கும் எவரோஒருபுலவர் முத்தொள் ளாயிரத்தில், பாண்டியனது நாட்டுவளத்தைக் கூறுபவர், "நத்தையின் வெண்முட்டையும் புன்னையின் குவிந்த மொட்டும் இளைய பாக்கின் பாளையும் சிதறிக் கிடந்து யாவும் ஒளி விடும் முத்துகள் போன்று தோற்றமளிக்கும் பாண்டியனது - பாண்டிநாடு’2 -எனக் கூறினார். இவ்வரும்பிற்கு முத்துமட்டுமன்றி மற்றொரு பொருத்த மான உவமையைப் புலவர்கள் படைத்தனர்; படைத்து வளர்த் தனர். பல்லியின் சிறு முட்டை வெண்மையாகவும் உருண்டை யாகவும் இருக்கும். புன்னை அரும்பிற்கு ஈடுகொடுக்கும் உவமப் பொருள்; அளவாலும் ஒத்தது. 'பொரிப்புறப் பல்லிச் சினையின்ற புன்னை'8 --என மாறன் பொறையனார் என்பார் பாட, அதனை விரித்து வழி மொழிந்தார் முன்றுறையரையனார். குவிந்த அரும்பு பல்லிமுட்டை, 1 தனிப்பாடல் . 3 - ; 4 自 ந், ஐ 43, 2 முத் 58, 岛西,岛