பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/503

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
483


என்றெல்லாம் பாடினர். இம்மணம் விழாமனம் போன்று பரவிப் புலாலின் கடுமணத்தைக் கடிவதை உலோச்சனாரும், '. . . . . . . புன்னை விழவுதாறும் விளங்கினர் விரித்துடன் கமழும்” -எனப் பாடினார். இவற்றால் புன்னை மலர் மணம் கமழ்வது என்பதை அறிய ல்ாம். இம்மணம் கருதியும் எழில் கருதியும் இம்மலரை ஆடவரும் மகளிரும் கொய்து சூடினர். பல மலர்கள் கூடிய கொத்தான இம்மலர் எழில் மிக்கது. இதன் வெண்மை கருதி வால் இனர்' என்றும், தாதின் பொன் நிறங்கொண்டு பொன் இனர்' என்றும் பளிச்சிடுவது கொண்டு விளங்கு இணர்' என்றும் பலவாறாக "இணர் எனப்பட்டது இதன் மரம் தன் கிளைகளை மணலில் படியும் அளவில் தாழப்பரப்புவதால் மகளிர் கூட்டம் எளிதில் பூக்களைக் கொள்வர். "நின்றபுன்னை நிலத்தோய் படுசினை'யின் தாதுசேர் நிகர்மலர் கொய்யும் ஆயம்' எனப்பட்டனர். ஆடவரும் மெல்லினர்க் கண்ணி மிலைத்த'னர். இவ்வகைகளாக இதன் மலர் புலாலின் கெடுநாற்றத்தைப் போக்கவும், சேரியை மணங்கமழச் செய்யவும், மகளிர் ஆடவர் சூடவும் பயன்பட்டது. பரதவ இனத்தார் இம்மலர்க் கொத்தை மிகுதியாகவே சூடினர் போலும். அவர்கள் சூடியவை போக எஞ்சிய மலர்களே காயாகக் காய்த்தன' என்றார் உலோச்சனார். அதனை, 'சூடுநர் தொடுத்த மிச்சில் (எஞ்சிய) கோடுதொறும் நெய் கனி பசுங்காய் துரங் தம்'? -என்றார். இதன்கண் உள்ள 'நெய்கனி பசுங்காய்' என்பதால் இக்காயின் பருப்பிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுதல் அறிவிக்கப்பட்டது. புன்னையின் கருத்துகளைத் தொகுத்தால், அடிமரம் வளைந்து சருச்சரையாகப் பருத்தது; கிளைகளும் வளைந்தவை; 1 நற் 88 : 3, 4 2 நற் : :78 : 4, 5,