பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/510

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
490


வேறுபட்ட அடைமொழிக் குறிப்புகள் இரண்டின் வேறுபாட்டைக் காட்டின. - மேலும் தாழை நீர்ப்பிடிப்பில் வளர்வது- அலைநீர்த் தாழை அன்னம் பூப்பவும்' என்றார் நத்தத்தனார். தென்னைக்கு நீர்ப்பிடிப்பு வேண்டுவதன்று. இவ்வேறுபாட்டையும் வைத்துத் தாழையைப் புனல் தெங்கு என முத்தொள்ளாயிரம் குறித்தது. இக்குறிப்பன்றித் தாழையைக் தெங்காகக் குறிக்கும் இடம் தென் படவில்லை. எனவே, தெங்கு’ என்னும் சொல் தாழைக்கு உரிமையுடைய பெயர் அன்று. 'முசலி என்னும் பெயர் நிகண்டுகளில் மட்டுமே காணப் படுவது. இச்சொல் பல்லியினம், சில கருவி வகை முதலிய பல பொருள் தரும் ஒரு சொல். முசற்றாழை என்றொரு வழக்கு உளது. அஃதும் தாழையைக் குறிப்பதன்று. இலக்கிய வழக்கும் இல்லை. எனவே, முசலி தாழையின் உரிமைப்பெயர் ஆகவில்லை. மடி என்னும் பெயர் தாழைக்கென நிகண்டுகளில் காணப் படுகின்றது. ஒரு நரம்பில் இதன் தாள் இரண்டாக மடிந்திருப்பு தனாலும், பூவின் மடல் மடித்துச் சூடப்படுவதாலும், மடலை மடித்து மலர்முகை போல் புனைந்து சூடப்படுவதாலும் இப்பெயர் அதற்குக் குறிக்கப்பட்டது. - 'துர்துஒய் பார்ப்பான் மடிவெள் ளோலை' (அகம் : 337 : 7) என எழுதி மடிக்கப்பட்ட பனை ஓலை முடங்கல் மடிவெள் ளோலை' எனப்பட்டது, இவைபோன்றே தாழையும் இப்பெயர் பெற்றுள்ளமையால் 'மடி என்னும் பெயர் தாழைக்கு மட்டும் உரியதன்று. . . முடங்கல் என்னும் பெயரும் நேர்முகமாகத் தாழையைக் குறிப்பதன்று. இச்சொல்லிற்கு முடங்கிய வினையால் "வளைவு' என்று பொருள். இறால் மீன் காய்ந்து கருவாடாக வளைந்து தோன்றும். அதனை, 'இறவின் துய்த்தலை முடங்கல்’ என முடங்கலாக (நற்றிணை 358:8) நக்கீரர் குறித்தார். தூக்கணங் குருவியின் வளைந்த சிறகு முடங்கல் சிறைய தாங்கன்ங்குரிஇ" Tಣ (குறுந்தொகை : 375 : 5) முடங்கலாகக் குறிக்கப்பட்டது. ನೆಡ್ತಿ கல்பெற்றதால் விளைந்தகொடிப்பவளத்தை இளங்கோவடி" களார் "கல்லுடை முடங்கல்' என முடங்கலாகவ்ே (சிலம்பு ; 14 191) குறித்தார். இவ்வகையிலேயே,