பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/531

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
511


கும் பொதுப்பெயராயினும் சங்க இலக்கியங்களில் பெரும்பாலான இடங்களில் வெண் கடம்பைக் குறிக்கவே வந்துள்ளது. ஆங் காங்கே செங்கடம்பை ஒரோ வழி குறிக்கும். இவ்வேறுபாட்டை இப்பெயர் வந்துள்ள முன்பின்னான பொருளமைப்பு கொண்டே காணவேண்டும். ஆனால், கடம்பு என்னும் பெயர் செங் கடம்பைக் குறிக்கும். கடம்பைக் காட்டிலும் மராஅம் என்னும் சொல்லே சங்க இலக்கியங்களில் அதிகம் ஆட்சி பெற்றுள்ளது. எனவே, மராஅம் பற்றிய கருத்தை முதலில் கண்டு அதன் தொடர்பில் அடுத்துக் கடம்பை-செங்கடம்பைக் காண வேண்டும். அதற்கு முன் ஒன்றைக் குறிக்க வேண்டியுள்ளது. நமது பண்டைய இலக்கிய இலக்கண நூல்கள் கிடைத் தற்கரிய கருவூலங்கள்; பொன் பொதிந்த பெட்டகங்கள்: மணிகள் மலித்த பேழைகள்; சுவைக்கனித் தோட்டங்கள். அவை யாவற்றை யும் நாம் துய்ப்பதற்குத் தடையாக அடைப்பான்களும் பூட்டுகளும் முடிச்சுகளும் உள்ளன. அவற்றை, ஒதுக்கி வழிகாட்டியும் திறந்து பழி நீக்கியும், அவிழ்த்து ஒளிகாட்டியும் உதவியோர் உரை யாசிரியர்கள். அவர்களது அருட்பணியை நாம் பாராட்டவும் நன்றிகூறவும்-ஒன்-போற்றவும். வனங்கவும் கடமைப்பட்டுள் ளோம். இத்துடன் ஒரு சிறு குறையையும் குறிக்க நேர்கின்றது. தமது உரைகளால் மூலத்தைத் தெளிவாக்கியவர்கள் ஒரோ வழிச் சில இடங்களில் மிகச் சில இடங்களில் குழப்பத்தைத் தந்துளர். சில இடங்களில் உரையைவிட மூலம் தெளிவாக உள்ளது. உரையால் ஏற்படும் குழப்பத்தை மூலம் தெளிவுபடுத் துகின்றது. இதற்கு இம்மராஅமும் ஒரு சான்றாகின்றது. குறிஞ்சிப் பாட்டில், அடி 66 : எரிபுரை எறுழம் சுள்ளி கூவிளம்' அடி 85 : 'பாங்கர் மராஅம் பல்பூந் தணக்கம்” -என்பவற்றில் வந்துள்ள 'சுள்ளி' 'மராஅம்” இரண்டிற்கும் நச்சினார்க்கினியர் பின்வருமாறு உரை எழுதியுள்ளார்: - 'சுள்ளி - மராமரப் பூ" 'மரா அம் - மரவம் பூ"