பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/534

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514


‘கருங்கால் மராஅம்' என்று சிலவிடங்களிலும், 'செங்கால் மராஅம்’ என்று பலவிடங்களிலும் குறிக்கப் பட்டுள்ளது. இவைகொண்டு அடிமரம் கருப்பா, சிவப்பா; கருப்பும் சிவப்புமா? என்ற ஐயம் எழலாம். முன்னே க்ண்ட திரண்டு பொரிந்த அடிமரம் கருமை என்றும், அதற்கு மேல் நீண்டு வளரும் மரப்பகுதி செம்மை என்றும் கொள்ளவேண்டும். இதனை விளக்குவதுபோன்று மாமூலனார் பாடல், - “.... ... ... ... ... செங்கோல் கருங்கால் மராஅத்து' எனச் செங்கோல், கருங்கால் எனக்குறித்து அடிப்பகுதி கருமை என்றும் மேற்பகுதி -கிளைகள், -கொம்புகள் செம்மை என்றும் குறிக்கின்றது. இது மலர்த்தும் மராம்பூ கோட்டுப் பூ. - இங்கு மராஅம் எனப்படும் வெண் கடப்பம் பூ, அளவில் சிறியது. "தேம்பாய் மெல்லினர்' (அகம் : 221 : 8 ) 'வாலினர்' வான் மெல்லினர்' என்னும் தொடர்கள், இப் பூ, மென்மையானது: கொத்தாகப் பூப்பது: அக்கொத்து வெண்மைக் கொத்து -என்று காட்டுகின்றன, இதன் தனிப் பூ நல்ல வெண்மை நிறம் பொருந்தியது. இவ் வெண்மையை, <! "... ... ... ... ...வாவிய சுதை விரிந் தன்ன பல்பூ மராஅம்'2 -என மாமூலனார். தூய வெண்மைச் சுண்ணாம்பு - சுதையைக் குறித்துள்ளார். வடமோதங்கிழார் என்பார், இதன் வெண்மை ஒளியை "வெயில் அவிர் புரையும்' எனக் கதிரவன் ஒளியொடு பொருத்தினார். கல்லாடனார் நீர்வேட்கை கொண்ட யானை மலைப்பகுதியில் மராமரத்து மலர் உதிர்வதை வெள்ளிய மழைத்துளி விழுவதாக எண்ணி அங்குமிங்கும் ஒடி அலைந்தது 4 என்று வெள்ளிய மழைத்துளி என்றார். திருத்தக்க தேவர், முடியணிந்த மன்னர் 1 அகம் : 127 : 12, 18. ? **:11, 15 2 அகம் : 211 : 1, 2, 4 அகம் : 199; 1.4,