பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

523

இதன் தாதுத் தூள் நல்ல செம்மை நிறங்கொண்டது. இத்துள் உதிர்ந்து பரவிக் கிடப்பது அழகிய காட்சி நல்கும். இதனைப் பட்டுப் பூச்சி நிறம்போன்றது என்றும், பரந்து கிடப்பது புள்ளியிட்ட கோலம் போட்டது போன்று அழகியது ன்ன்றும் நத்தத்தனார் பாடினார். (சிறுபாண் : 69-71) - இம்மலர் ஒப்பனைக்காகவோ, மணங்கருதியோ பரவலாகச் சூடப்படவில்லை. நன்னன் என்னும் குறுநில மன்னன் இதனை மாலையாக அணிந்திருந்ததைப் பதிற்றுப் பத்து (பதிகம்:4:7) குறிக்கின்றது. இதனையன்றி மகளிர், ஆடவர் சூடியதாகத் தெரியம் வில்லை. பாலை நிலத்தில் ஆறலைக் கள்வர் சூடி விளங்கினர். இம்மலர் முருகனுக்குரிய மலராகக் கொள்ளப்பட்டது. 'உருள்பூந் தண்டார் புரளும் மார்பினன்' எனத் திருமுருகாற்றுப் படை குறிப்பது போன்று பல நூல்களும் முருகனது மார்புமாலை யாக இம்மலர் அமைந்ததைப் பாடுகின்றன. தலையிலும் சூடப் • لقي سامس السا 'கார் நறுங் கடம்பின் கண்ணி சூடி" - என்னும் பிரமசாரி பாடலால் இதனை அறியலாம். முருகன் மார்பிலணியும் இம்மாலை புணர்ச்சியின்போது அணியப் பட்டதாகக் கொண்டனர். மே ற் கா ன ப் பட்ட திருமுருகாற்றுப்படை அடிக்குப் பொருள் எழுதிய நச்சினார்க் கினயர் "இது போகத்திற்குரிய தார்" என்று எழுதினார்: பொதுவில் 'மாலை மார்ப' எனவரும் மற்றுமோர் அடிக்கும் 'இன்பத்திற்குரிய மாலையணிந்த மார்ப' என்றெழுதிக் காட்டினார். முருகன் என்னுங் சொற்கு அழகன் என்று ஒரு பொருள். அழகனாகிய அவன் இக்கடம்பைச் சூடுவதால் மேலும் அழகு பெற்றானாம். மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார், கடம்பின் சீர்மிகு நெடுவேள்' என்று கடம்பால் சீர்மிகும் முருகன்' என்று பாடினார். இவ்வடிக்கு உரை வகுத்த நச்சர், "கடம்பு குடுதலால் அழகு மிகுகின்ற முருகன்' - என்றார். இவைகொண்டு இம்மலரின் அழகுத் தோற்றத்தை உணரலாம் 1 நற் 34 : 8 2. மது. கா : 613, 614.