பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/549

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
529


இதன் கருநீல நிறம் கண்ணுக்கிடும் அஞ்சனம் போன்றது. 'செரியிலைக் காயா அஞ்சனம் மலர'1 -என நப்பூதனார் அமைத்தார். நிகண்டுகள் இவ் அஞ்சனத் தொடர்பில் 'அஞ்சனி' எனப் பெயர் சூட்டின. எக்காரணத்தாலோ வச்சி' என்றொரு பெயரும் இணைக்கப்பட்டது. இத்துணை பெயர்கள் குறிக் கப்படினும் இதற்கமைந்த மற்றொரு இலக்கியப் பெயர் 'பூவை' என்பது. 'காயா பூவை என்னும் இரண்டுமே இலக்கியப் பெயர்கள். பூவை என்னுஞ்சொல் நாகணவாய்ப் பறவையையும் காயாவையும் குறிக்கும். பறக்கும் நாகணவாய்ப் பறவையிலிருந்தும் பிரித்துக் காட்ட இணைப் பறவாப் பூவை' என்றார் கடுவன் இளவெயினனார். இம்மலர் முல்லை நிலப் பூ; அந் நிலத்தின் செந்நில வழியிற் பூக்கும்; சிறுபான்மை குறிஞ்சியிலும் பூக்கும். கார்காலப் பூ; காலையிற் பூத்து இரவில் உதிரும்; குற்றுச் செடிக்கிளையிற் பூக்கும் கோட்டுப் பூ: புல்லிய பூ; இதன் முளை அரும்பு கருமை நிறத்தது; விரிந்தால் மயிற் கழுத்து போன்று பளபளக்கும் நீல நிறத்தது; நீல மணிபோன்றது. வீழ்ந்து வாடினால் கருமை காட்டுவது. பல பூக்களாக பரவிப் பூக்கும்; கொத்துக் கொத்தாகப் பூக்கும். மெல்லிய மலர், மணமும் உண்டு. இவற்றை அறிவிக்கும் அடிகள் பின்வருவன: "அரக்கத் தன்ன செந்நில மருங்கிற் காயாஞ் செம்மல்" (அகம் : 14 : 1) 98 : rنه » می :

崇84