பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560


வார்தயக்க மெய்தும் வழுத்து" இதில் இருப்பையின் மிகு சுவையும் மணமும் குறிக்கப்படுகின்றன; மருந்தாக்கி உண்டால் பித்த சுரம் போகும்; வெறும் பூ, நீர்வேட்கையைத் தனிக்கும்; சிலருக்கு உடல்நிலைக்கேற்ப அழலை உண்டாக்கும்; பித்தத்தை உயர்த்தும் என்றெல்லாம் கூறி இறுதியில் இப்பூவைப் போற்றுமாறு முடித்துள்ளார். இதனில் அறிவியற் பாங்கு ஒன்றும் உண்டு. இப்பூவின் சாற்றை எடுத்து இரும்புத் துளில் கலந்து பக்குவம் செய்து அத்துளை மை போன்று குழைத்தெடுக்கலாம். இத்துணை அரிய பயன்கொண்டது இப் பூ. இருப்பையின் பெயரால் ஒர் ஊர் உண்டு. அது வளமான ஊர். 'விராஅன் என்னும் வள்ளலின் ஊர். இவ்வூரைப் பரணர் சிறப்பித்துப் பாடியுள்ளார். இலுப்பூர், இருப்பைக்காடு, இலுப்பை எனும் ஊர்களும் உள்ளன. இத்துணை சிறப்புடைய இருப்பைப் பூவிற்குக் கபிலர் குறிஞ்சிப் பாட்டில் இடம் வைக்கவில்லை. கரணியம் இது. சூடும் பூ அன்று. உருண்டு திரண்டு முத்துப்போல் தோன்றும் இதனை மாலையாகக் கோக்க இதன் துளை வாய்ப்பு தருவது. கோத்து அணிந்தால் முத்துமாலை போன்று அழகையும் ஊட்டும். அணி யாதது ஏன்? இதன் இனிப்புச் சுவையே கரணியம் ஆகும். இனிப்பைத் தரும் சாற்றுக் கசிவு உடலில் பிசுபிசுப்பை ஏற்றுமாதலால் சூடவோ அணியவோ இயலாததாயிற்று- - சூடாப் பூ என்றாலும் இது இலக்கியத்தில் வாடாப் பூ. 1 &# : 850 : 4,