பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/587

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
567


குறித்துப் பாடினார். 'நரைவாய் வாடல் நாறும்' என்றபடி இதன் பூவும் மனக்கும். பாதிரி ஒரு மரம், எனவே, இது கோட்டுப் பூ. "அத்தப் பாதிரி', 'கானப் பாதிரி' என்பனவற்றால் இது பாலை நிலப் பூ. பிற நிலங்களில் இக்காலத்திலும் அருகித் தோன் துவது: "வேனிற் பாதிரி" என்றபடி முதுவேனிலில் பூக்கும். இள வேனிலிலும் பூப்பதை ஐங்குறுநூறு (346) பாடியுள்ளது. நீண்ட கொப்பில் காம்பிற்கு ஒரு பூவாக 20 பூக்கள் வரை மலரும். காம்பிலிருந்து புறவிதழ் மங்கலான மஞ்சள் நிறத்தின் ஐந்து முக்கோன இதழ்களுடன் குப்பிபோன்றிருக்கும். அதனைப் "பாதிரித் தூத்தகட்டுமலர்' என்றனர். அப்புறவிதழிலிருந்துகருஞ் செந்நீல - ஊதா நிறத்தில் அடியில் புனலாக மேலே ஐந்து இதழ் கள் விரியும். புறவிதழிலிருந்து தொடரும் அகவிதழ்ப் புனல் சற்று முதுகு வளைவாகத் தோன்றுவதால் இது, 'வேனிற் பாதிரிக் கூனி மாமலர்' (அகம் : 257 : 1) என்றும் வேனிற் பாதிரிக் கூன்மலர் அன்ன” (குறுந் : 147 : 1) என் றும் கூனல் மலராகப் பேசப்படும். அகவிதழ்கள் ஐந்தில் இரண்டு சற்றுத் தாழ்வாகவும் மூன்று மேல் நிலையாகவும் அமைந்திருக்கும். இதழ்கள் யாவும் மிக மென்மையாக, மேற்பகுதி துய்யென்றிருத் தலால், "அத்தப் பாதிரித் துய்த்தலைப் புது வி" (அகம் : 191 : 1) "துகிலிகை அன்னத் துய்த்தலைப் பாதிரி" (நற் ; 118 : 8) - எனத் துய்த்தலை யாகப் பாடப்பட்டுள்ளது. அகவிதழின் புறமெல்லாம் மேற்கண்ட ஊதா நிறங் கொண் • lقت سا இப்பூவைப் புலவர்கள் கூர்ந்து நோக்கிப் பல உவமைகளால் வண்ணித்துள்ளனர். இதன் கருஞ்செந்நீல நிறத்தையும், இதழ் களில் துய்யென்ற பஞ்சுத் தன்மையையும், இதழமைப்பையும் உளத்துக் கொண்டு,