பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/588

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
568


"ஒவ மாக்கள் ஒள்ளரக் கூட்டிய துகிலிகை அன்ன துய்த்தலைப் பாதிரி” -என ஒவியர் g - گست ٤٦۔ -جs Tمٹا د“ ، مب, بہ، ل ... * , a கள் அரக்கு வண்ணத்தில் தோய்த்த துகிலிகை என்னும் ஒவிய எழுதுகோலை உவமை கூறினார் பாலைபாடிய பெருங்கடுங்கோ. இதன் இதழமைப்ல்பயும் பஞ்சுப் பாங்கையும் நிறத்தையும் தொண்டு திருத்தக்க தேவர் நத்தையின் நாக்கைப் பொருத்தி, "... ... ... பாதிரி ஒத்த பூ உடற் றிய நாவின் நாகு” -என்றார். மற்றுமோர் ஆழ்ந்த உவமைகாட்டப்பட்டுள்ளது. அதனால் இம்மலரைப் பொதுமக்களும் நன்கு அறிந்திருந்தமை புலப்படு கின்றது, பூவின் புறத்தோற்றப் பார்வையோடு அகத்தோற்றத் தையும் கண்டு வண்ணித்துள்ளமை இம்மலருக்கொரு தனிச் சிறப்பு எனலாம். கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஒரு யாழை விளக்க முனைந்தார். யாழினது பத்தர்மேல் தோல், மூட்டமாக ஒட்டிப் போர்த்தப் பட்டிருக்கும். அத்தோல் இலக்கியங்களில் பச்சை எனப் படும் பச்சைப் போர்வை என்பர். யாழின் பத்தரைத் தோலில் பொதிந்து, தோலின் பொருந்துவாய் தைக்கப்பட்டிருக்கும். அத் தோல் துவர் என்னும் காவி நிறம்ஊட்டப்படும். காவிநிறத்தோடு தைக்கப்பட்டுள்ள பொருந்துவாயின் தையல் ஒழுங்கிற்கு ஒர் உவமை கூறி விளக்க எண்ணினார் பெரும்புலவர். பாதிரிப் பூவில் மனம்பதித்துக் கூர்ந்து நோக்கிய அவர் அதன் வயிற்றிடத்தை வகிர்ந்தும் பார்த்துள்ளார். பாதிரி இதழ் களின் உட்பக்கம் தோல் மயிர் போன்று பஞ்சிழைகளைக் கொண் டது. இதழின் நடுநரம்பு இணைத்துத் தைக்கப்பட்டது போன்று அமைந்தது, இதனை மகளிரது வயிற்றில் அமைந்த மயிர் ஒழுங்கிற்கு உவமையாகக் கூறுவர். கோப்பெருஞ்சோழன், "வேனிற் பாதிரிக் கூன்மவ ரன்ன மயிர் ஏர்பு ஒழுகிய அம்கலுழ் மாமை”3 என்றுபாடியுள்ளார் 7. રું. . 3 குதுத் : 147 : 1, 2.

ੋਂ !