பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/595

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
575


இளவேனிற் பருவத்தில், நள்ளிரவில் பூக்கும்; வெண்மை நிறமானது; இதழில் சிறு கோடு கொண்டது, மனங் கமழ்வது; சூடும் பூ ஆகும். இதனைச் சிலப்பதிகார அரும்பத உரைகாரர் காட்டு மல்லிகை’ என்றார். இலக்கியங்களில் காடு, கான்’ என்னும் சொற்கள் அவ்வவ்விடங்களில் அமையும் பிற கருப்பொருள் களுக்கேற்ப சுரம் என்னும் பாலைநிலத்தையோ, முல்லை நிலத் தையோ குறிக்கும். இங்கு பாலையைக் குறித்தது. நச்சினார்க்கினியர் குளவியைக் காட்டு மல்லிகை" என்றார். குளவி, முல்லைக் குடும்பத்தைச் சார்ந்தது. இவ்வகை யில் அதிரலுக்கடுத்துக் காணத்தக்கது. ஆனாலும், குளவி காட்டுமல்லிகையாகுமா? 22. மலைப்பச்சை மலர், குளவி. முல்லைக் குடும்பத்துக் குளவி நீர்நிலைக் கரையில் இடம் பெறும் கொடியாகும். 'நீரிழி மருங்கின் ஆரிடத் தமர்ந்த குளவி'2 -என்பதும், "குளவி (மலர்கள்) மொய்த்த (விழுந்து கிடக்கும்) அழுகற் சின்னிர்" - என்பதும், இருபால் யானைகள் குலவியவாறு குளவித் தண்கயம் (குளம்) குழையத் திண்டி'ன என்பதும் இக்கொடி நீர்நிலைப்பக்கத்தே 1 குறி: பா : 76 உரை, 3 குறு :55 2 அகழ் : 212 7, 8 4 நற் :282 :.ே