பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

577


நச்சினார்க்கினியரோ காட்டு மல்லிகை என்றார். இது பொருந்தாது. இதன் பூவைப்பற்றிய குறிப்பைவிட இலைக்குறிப்பு சிறப் பாக உள்ளது. ஆயினும் மணமுள்ள இதன் பூ, மகளிராலும் ஆடவராலும் சூடப்பட்டது. "நாறு இதழ்க் குளவி (புறம் : 380 7) 'கமழுங் குளவி (பதிற் 12 : 1.0) "குளவிக் கடிபதம் கமழுங் கூந்தல்' (நற் : 246 : 9) 'குவளையொடு பொதிந்த குளவிநாறு நின் நறுநுதல்” (குறுந் 59) . -என்னும் அடிகள் இது மணப் பதையும், மகளிர் கூந்தலிலும் நெற்றியிலும் படுமாறு சூடுவதையும் குறிக்கின்றன. களிறும் புலியும் போரிட்டன. குருதி வழிந்தோடி அந்நிலம் செங்களம் ஆயிற்று. குருதிப் புலால் நாறியது அக்

  • குருதிச் செங்களம் புலவு அற வேங்கை உருகெழு நாற்றம் குளவியொடு விலங்கும்' - என்றார் பேரிசாத்தனார். குருதிப் புலால் நாற்றத்தைத் தடுக்கும் அளவில் இதற்கு மனம் உண்டு என அறிகின்றோம்.

கொல்லிமலையில் குளவி குறிக்கப்பட்டதுபோன்று பிட்டங் கொற்றனது குதிரை மலையிலும் குறிப்பாகக் பாடப்பட்டது. வீட்டு முன்றிலில் இது அமைந்திருந்தமையால், 'கூதளங் கவினிய குளவி முன்றில்'2 -எனப்பட்டது. இக் குளவி முன்றிலில் கூதாளமும் அழகுபெற்று விளங்கியதாம். இங்கு மட்டுமன்று, இக்கூதாளம் பல்லிடங்களிலும் குளவியொடு இணைத்துப் பாடப்பட்டுள்ளது: IT (Pللو) rraی زی) . . . ....... حس ... ، வெண் கூதளந் தொடுத்த கண்ணி' (திருமுருகு : 192) நாறிதழ்க் குளவியொடு கூதளங் குழைய' (புறம் : 380:7) 'குல்லை குளவி கூதளங் குவளை' (நற் :376 : 5) 1 அகம் : 268 : 2.5, 2 புறம் : 16:11-14, 米37