பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578


எனவே, குறிஞ்சி நிலத்தில், கொடிப் பூவாக, இலைச் செறிவால் மலைப்பச்சை என்று பெயர் பெற்று, அகவிதழ் வெண்மை நிறங் கொண்டு, மணங்கமழும் இப் பூ, கார்காலத்து மாலைநேரப் பூவாகும். இதுபோன்று வெண்மை நிறங்கொண்ட இதன் இணைப் பூ, கூதாளி அடுத்துக் காணத்தக்கது. 23. குருகு மலர். கூதாளி. குளவியொடு குலவி நிற்கும் கூதாளி, கொடி இனம். குறிஞ்சி நிலம் என்னும் அளவில் அதனுடன் ஒற்றுமை உடையது. குடும்ப வகையில் இது தாளி வகையைச் சேர்ந்தது. தாளை உடை யது தாளி. தாள் இல்லாத சில இனமும் பிற ஒற்றுமையான தன்மையும் பயனும் கருதித் தாளி எனப்படும். அவ்வகையில் இது அமைந்தது. கூ’ என்னும் அடைமொழி நிலம், கூர்மை, தழைப்பு, ஒலி' என்னும் பல பொருள்களில், இங்கு தழைப்பு’ என்னும் பொருளில் அமைந்தது. - இதன் இயற்பெயர் 'கூதாளி. இச்சொல் இகர இறுதி கெட்டுக் கூதாள்’ என்றாகி, அம் விகுதி பெற்றுக் கூதாளம் எனப்படும். இவ்வமைப்பை நச்சினார்க்கினியர் சான்றுT காட்டுவதன் வாயிலாகக் காட்டியுள்ளார். - நிகண்டுகள் துடி’ என்னும் மற்றொரு பெயரையும் குறிப்பிட்டுள்ளன. இது குற்றாக வளர்ந்து பின் வளைந்து சாய்ந்து கொடியாகும். - பாகற்கொடி இதன் முற்றிய இலைகளில் படர்ந்து காய்த்திருப்பதை. “... ... ... - - - பசும்பிடிப் U746) கூதள மூதிலைக் கொடிநிரைத் துரங்க'2 -என இளநாகனார் பாடியுள்ளார். எனவே, இதன் பூ கொடிப் பூ. 1 தொல் எழுத்து 247 உரை 2 அகம் : 235 :14, 14,