பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/613

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

593


முள்ளைக்கொண்ட தாழையும், முள்போன்ற சுனைப்பைக் கொண்ட தாமரையும் "முண்டகம்' என்னும் பெயரைக்கொண்டன. முள்ளைக் கொண்ட பிற பூக்களும் உள. அவ்வாறிருக்க இதற்கு மட்டும் முள்ளி' என்னும் பெயர் அமைவானேன்? மற்றவற்றை விட இதன் முள் குறிக்கத்தக்க கூர்மையும், வளைவும், வெண்டிை யும் கொண்டது. இவற்றிலும் இதன் வளைவு,

கூன்முள் முள்ளி' (அகம் : 26 : 1)

"கூன்முள் முண்டகக் கூiம்பனி மாமலர்' (குறுந் 51:1) -எனக் கூன்' என்னும் சொல்லால் குறிக்கப்பட்டது. இதன் கூர்மை, வெண்மை, வளைவு இவற்றையெல்லாம் உளத்துக் கொண்ட அம்மூவனார், 'அணிற் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகம்'1 -என அணிலின் பல்லை உவமையாக்கினார். கல்லாடனாரி காரெலியின் இணைந்த பற்களை உவமையாக்கினார்.2 சிறப் பாக இம்முள்ளின் கூனல் கொண்டே இது முள்ளாற் பெயர் பெற்றது. எனவே, இதனைக் கூன் முள் மலர்' எனலாம், முள்ளி மணல்மேட்டில் தழைத்திருக்கும். இதன் வேர்ப்பகுதியில் நண்டு புகுந்துகொள்ளும். இதன் தண்டாகிய தாள்களைக் கொண்டு சிறு குடில்களின் கூரை வேயப்பட்டது. இதனை, - - - 'கண்டல் வேலிக் கழிசூழ் படப்பை முண்டகம் வேய்ந்த குறியிணர்க் குரம்பை கொழுமீன் கொள்பவர் பாக்கம்'4 -என ஒரு புலவர் விளக்கியுள்ளார். பரதவர் வாழும் பாக்கங்களில் உள்ள சிறிய குடிசைகள் இத்தாளால் வேயப்பட்டதை இவ்வடிகள் காட்டு கின்றன. இதனைக் குறும்புதல் முண்டகம்' எனக் கல்லாடர் குறித்தார். இவற்றால் இஃதொரு சிறு செடி என அறியலாம். இவற்றிற்கேற்ப இஃதொரு சிறு நிலச்செடி. எனவே, இது நிலப்பூ, ax-x-x, - 4t க: : 1 3 ஜங் :22, 28, 2 கல் : 68 : 12, 18, 4 நற் : 207 1-8, 齋 88