பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/625

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
31. களரிப் பொன் மலர்

ஆவிரை.

தொல்காப்பியத்தில் ஆவிரை என்னுஞ்சொல் குறிக்கப் பட்டுப் புணர்ச்சி விதி பெற்றுள்ளது. வல்லின முதன்மொழியோடு புனரும்போது இறுதி ஐ கெட்டு அம்முச்சாரியைச் சேர்ந்து 'ஆவிரம் பூ என்றாகும். பிற்காலத்தார் ஆவாரை என்றனர். அஃதும் ஆவாரம் பூ எனப்படும். ஆவிரை மூன்று வகைப்படும் என முன்னே குறிக்கப் பட்டது. ஆயினும் பெரிய அளவில் குற்றுச் செடியாகக் கிளை விட்டு வளரும். கோட்டுப் பூவாம் ஆவிரையே சிறப்புடையதாகும். 'விரிமலர் ஆவிரை" என்பதற்கேற்ப இப் பூ தன் 5 அகவிதழ்களை நன்கு விரித்துச் சமதளமாக மலரும். 'பொன் நேர் ஆவிரைப் புதுமலர்' என்றதன்படி இதன் அகவிதழ்கள் பொன்போன்ற மஞ்சள் நிறங்கொண்டவை. அதிலும், அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரங் கண்ணி" என்றதன்படி பளிச்சிட்டு ஒளிரும் பொன்போன்ற மஞ்சள் நிறங்கொண்டவை. அகவிதழ்களின் இடையே கிச்சிலி நிற வரிகள் உள்ளன. இதன் பொன் நிறத்தால் இது பொன்னாவிரை' என்றே வழங்கப்படும். இது களரி ஆவிரை' எனப்பட்டது. சங்க இலக்கியங் களில் 'கள்ளி போகிய களரியம் பறந்தலை' எனக் களறி என்னும் காட்டுக் களர் நிலம் கள்ளியுடன் பேசப்படும். எனவே, இது முல்லை திரிந்த பாலை நிலத்ததாகும். தைத்திங்களாம் முன்பளிப்பருவத்தில் பூக்கத்தொடங்கித் தொடர்ந்து இரண்டு பருவங்கள் பூக்கும். இப் பூ அகத்துறையில், மடலேறுவோன் 'அணிப்பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து'ச் சூடப்படும் பூவாகும். இதனை மடலேறும் சின்னப் பூவாகவே காணலாம். தலைவன் மட்டு மன்றிப் பனைமடலால் ஆன மடன்மா' என்னும் குதிரை வடிவிற் கும் அணிவிப்பான்." 1 தொல், எழுத்து 284 5 கனி 140 : ? 2 இந்துரல் பக்கம் 97, 98 6 கவி : 188 : 9, 10 8 குறி. பா : ?1. 7 குறு 178, 4 குறு : 178 ! - - M.