பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/676

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

 59. தேற்றாங் கொட்டை மலர்,

இல்லம்.

- இல்லம் மரவகை. கலங்கல் நீரைத் தேற்றிக் தெளிவாக்க இதன் கொட்டையை அந் நீரில் தேய்ப்பர். கவித்தொகை, 'இல்லத்துக் காழ் (கொட்டை) கொண்டு தேற்றக் கலங்கிய நீர் போல் தெளிந்து - என்றது. பெருங்கதை யிலும்? இது கூறப்பட்டுள்ளது. தேற்றப் பயன்படும் இக் கொட்டைக்குத் தேற்றாங் கொட்டை' என்று பெயர். இக் கொட்டை யின் ஆகுபெயராக இல்லம், தேறு, தேற்றா எனப் பெயர்பெற்றது. - 'இல்லம்’ என்னுஞ் சொற்கு வீடு-மனை' என்றும் பொருள் அன்றோ. பரிமேலழகர் இதனைக் கருத்திற்கொண்டு பரிபாடலில் 'மனை மாமரம்' என்று வந்ததற்கு 'மனை மாமரம் = இல்லம்; ஆவது தேறு' என்று எழுதினார். இது சொல்லளவுப் பொருத்தமாகும். - . . . - 'முல்லை இல்லமெ டு மலர...... காக்தொடங் கின்றே'4 - என்றார் பெருங்கண்ணனார். இவ்வாறு இல்லம் முல்லையொடு மலர்தலையும் கார் தெர்டங்கு வதையும் குறுங்குடி மருதனாரும் பாடியுள்ளார். எனவே, இம்மலர் முல்லை நிலத்தது; கார்ப்பருவத்தில் மலர்வது. - 'நத முல்லை உகு தேறு வி' - என இப் பூ தேறு வி என்றும், காம்பினின்று கழன்று உதிரும் என்றும் காட்டினார் முடத்தாமக் கண்ணியார். இப் பூவை முல்லை நிலத்தவர் அந்நிலத்துப் பூக்களுடன் மிடைந்து சூடுவர். அந்நிலத் தலைவன் ஒருவன், 'குல்வை குளவி கூதளங் குவளை - இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன்' - ஆகத் தோன்றினான். எனவே, இது சூடும் பூ ஆகினும் குறிஞ்சிப் பட்டியலில் இடம் பெறாத பூ. - கலி: 142 : 64. ് കsi ; ; ; 1, 2, 1. ! 2 பெருங் உஞ் 35 ; 215. 6 பொரு : 200 8 பரி : 1.1 : 19, - . 7 நற் . 326 : 5 , 3. 4 அகம் 1 864 17, 9, -