பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/681

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
661


இம்மரம் நிறைந்த காடு 'அழிஞ்சிக்காடு' எனப்படும் பாலைக்காடு எனவே, இதன் பூ பாலை நிலப் பூ. வேனிலில் பூக்கும். வெண்மை நிறமுள்ளது. சங்கப் பாடல்களில் பூபற்றிய குறிப்பில்லை. திருத்தக்கதேவர் இதன் பூவை அடையாளங் காட்டி யுள்ளார். - தூய வெண்மையான ஆடையை நீரில் தோய்த்துப் போர்த்தியது போன்றது - என உவமைகாட்டி, 'மாசில்வெண் டு கிலை நீர்தோய்த்து மேற் போர்த்த வண்ணமேபோல் காசின் மட்டொழுகப் பூத்த அழிஞ்சில்' 1 - . . . .” - என்றார். இது கொண்டு இது கொத்துப் பூ என்பதையும், மெல்லியது என்பதையும், பனிப்படலம் போன்ற வெண்மை நிறமுடையது என்பதையும் உணரலாம். சூடும் பூவாக இல்லை. 65. மணப் பூச்சு மர மலர். - ஆரம். ஆரம்' என்பது சந்தன மரம், மணத்திற் பெயர் பெற்ற மரம். மணப்பொருளாகவும் கலைப்பொருளாகவும் பயன்படுவது. 'குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்' என்கிறது பட்டினப் பாலை. இதனைப் பொதியமலைப் பிறப்பாகக் கூறுவர். 'கறிவளர் சந்தனம்' எனக் கபிலர் மலைநிலத்து மிளகுக்கொடி இதில் படர்வதைக் குறித்தார். . . குறிஞ்சிப்பட்டியலில் வந்துள்ள குறிப்பன்றி வேறெங்கும் இதன் பூவைப் பற்றிய குறிப்பில்லை. அங்கும் பெயரளவே உள்ளது. - * மரவகையில் கோட்டுப்பூவாக, மலைமரத்தால் குறிஞ்சியாக வேனிலில் பூப்பதாக, வெண்மைப் பூவாக அமைந்தது. - சந்தனத் தளிர்மாலை' என்றார் திருத்தக்க தேவர். பாரதியாரும் 'சந்தன மலர் புனைந்தே' என்றார். இவை யெல்ல்ாம் வண்ணனை அளவே. மணப் பூச்சிற்குப் பயன்படும் சிறப்புள்ள மரத்தின் பூ என்பதே இதன் குறிப்பாகும். சூடிய தாகச் செய்தியில்லை. 1. சிவ் சி:1849 குறி. பு: 2 பட், பா : 188 5 சிவ. சி , 2681 3 அகம் : 2: 6 பாஞ்,து 160