பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/707

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

687


- இப்பூவின் அமைப்பிற்குப் பொருத்தமான உவமைகொண்டு இப்பூவைப் பெரும்பாணாற்றுப்படையில் காண்கின்றோம். அகத்திப்பூ 3 அங்குலம் வரை நீளமானது. அவரைப் பூ அமைப்புடையது. செடியியலார் 'மணிவடிவப் பூ என்பர் வெண்மை, சிவப்பு ஆகிய இருவண் ண வகைகளை உடையது. அகத்தி என்றால் வெண்மை இனத்தையும், செவ்வகத்தி என்றால் சிவப்பினத்தையும் குறிக்கும். அகத்தியர் குணபாடம் செவ்வகத் தியைத் "துவர் அகத்தி" என்கின்து. இருநிறப் பூக்களும் ஒரே ഖുഖങഥിതl-lങ്ങ. இவ்வடிவமைப்பு காட்டுப்பன்றியின் பல்லைப் போன்றது. பன்றியின் பல்லிற்கு உவமை கூறும் உருத்திரங்கண்ணனார், "புகழா வாகைப் பூவின் அன்ன - வளை மருப்பு ஏனம் (பன்றி) ' - எனப் புகழா வாகைப் பூ' என்று இயற்பெயராக அன்றி வெளிப்படை அடைமொழியால் குறித்தார். இதற்கு நச்சினார்க்கினியர், 'அகத்திப் பூவினை ஒத்த' என்று உரை எழுதினார். இது கொண்டு அகத்திப் பூ புகழா வாகை எனப்பட்டதை அறிகின் றோம். (இதனை வாகைப் பகுதியிலும் கண்டோம்) திருமாலினது பன்றித் தோற்றத்தைச் சிவன் வேட்டுவ வடிவங்கொண்டு அழித்து அதன் பல்லைச் செவ்வகத்திப் பூவாகச் சூடிக்கொண்டதாகச் சிவபுரானக்கதை ஒன்று உள்ளது. ஞான சம்பந்தரும், 'அடுத்தடுத்து அகத்தியொடு வன்னி கொன்றை' யைச் சூடியதாகப் பாடியுள்ளார். தக்கயாகப் பரணி உரைகாரும் இக்கதையைக் காட்டியுள்ளார்.2 இக்கதைக்கருத்தாலும் பன்றிப் பல் உவமை. வெளிப்படுகின்றது. உவமைப் பொருத்தத்தால் அகத்திப் பூ பன்றிப் பல் மலர்' என இலக்கியப் பெயர் பெறுகின்றது. - கோட்டுப் பூவாகிய இது பணிக்காலத்தில் மலரும். நீர்ப்பிடிப் புள்ள இடத்தில் இதன் மரம் வளர்வதால் மருத நிலத்த தாகின்றது. - அகத்தி இலை, கீரை என்று சமையலுக்குப் பயன்பட்டு உடல் வெப்பத்தைத் தணிக்கும் மருந்து உணவும் ஆகும். இது பெரும்பான் 109, 19 2 :శ్రీశ ! 163 ఒar,