பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/711

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை96. இளமுகிழ்.

பசும்பிடி.

பிடா போன்று பிடி என்றொரு மரம் போலும். இதன் பச்சை இலை குல்லை, துழாய்போன்று மிகு மனங்கொண்டது இதனால் 'பசும்பிடி' எனப்பட்டது. . 'பச்சிலை மரம் தமாலம் பசும்படி என்றும் பேரே" - என் னும் சூடாமணியின்படி இம்மரம் பச்சிலை என்றே பெயர் கொண்டது. பிற நிகண்டுகளும் பச் சிலை தமாலம் பசும்பிடி யாகும்’ என்றன. குறிஞ்சிக் கோவையில் கபிலர் கோக்க நச்சர் ‘பச்சிலைப் பூ” என இலையையே பூ என்றார். பெருங்குன்றுார் கிழார், ... --- ... '" ... கொல் லிப் . பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து -எனக் கொல்வி மலை இலையாகக் காட்டினார். இங்கே கார்ப்பருவ அணிகளாகச் சொல்லப் படுதலின் இதற்குக் கார்ப்பருவம் சிறந்தது எனலாம் நப்பண்ணனார், 'பசும்பிடி இள முகிழ்" என்றார். இதற்குப் பரிமேலழகியார், "பச்சிலையது இளைய கொழுந்து' என்றார். இங்கும் மலை குறிக்கப்பட்டது. மிகு மனங்கொண்ட இலையாம் இது பிற மண மலர் களுடன் இருபாலாராலும் சூடப்பட்டது. சங்கப் பாடல்களிலன்றி இதன் பாடல் இல்லை. இதன் மிகு மனத்தில் இதன் பூ இலை மறை பூவாயிற்று போலும். : இவ்விலைச் சாற்றால் தலைப்பேன் போகும். முகப்பரு வேர் அறும். தோற்புண் ஆறும்." - பச்சிலையேயானாலும் முகிழ்’ என்னும் மலர்க்குறிப்பைப் பெற்றது. 1 சூடா. தி மரப்பெயர் : 31. 4. பரி 1 19 75 2 g5 9. un i 70 , . 5 அ. குணபாடம், பதிற். 81:24, டி.