பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/712

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97. நல்லார் முறுவல் இலை.

குருகிலை.

'குருகிலை = முருக்கிலை' - இவை கபிலர் சொல்லும், நச்சர் பொருளும். இஃதொரு மரத்தின் இலை. இவ்விலை புறத்தே வெண்மை நிறங்கொண்டது. சிறிய இவ்விலை உள் நோக்கி முருக்கிச் சுருண்டிருத்தலின் முருக்கிலை என்றார். இத்தோற்றத்தை வைத்துக் கண்ணஞ் சேந்தனார், - '... ... ... ... ...குருகிலை ஒண்டொடி நல்லார் முறுவல் கவின் கொள"2 -என மகளிர் முறுவலுக்கு உவமையாக்கினார். முனைக் கூர்மையும் இயைந்தது. இவ்விலை கார்காலத்தில் விளங்கித் தோன்றுவதை இதன் மலர்ச்சியாகப் பாடினர் மதுரைக் கண்ணங்கூத்தனார், முருகியம் போல் வானம் முழங்கி இரங்கக் குருகிலை பூத்தன கானம்’’8 - என்றார். கண்ணஞ்சேந்தனார், "அருவி அதிரக் குருகிலை பூப்ப - பெரிய மலர்ந்ததிக் கார்' - என்றார். இவற்றால் இது, 'முல்லை நிலத்தது; கார்காலத்தில் விளங்கித் தோன்றுவது; நல்லார் முறுவல் போன்றது' என்றறியலாம். இதன் பூவும் இலை மறை பூவாயிற்று. 1 ծմ. ար: 78, 8 கார் 27 2 திணை. ஐ : 21 4 திண்ை.: sot 1