பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/723

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

703


நறவம் நறைக்கொடி என்று முன்னர் (இந்து ற் பக்கம் 639)சான்று களுடன் காணப்பட்டுள்ளது. மேலும், நறவத்தைப்பற்றி வரும் சங்கப்பாடல்களில் எவ்வொரு இடத்திலும் அனிச்சத்தின் தனித் தன்மையான குழைவோ மிகு மென்மையோ குறிப்பாகவும் காட்டப் படவில்லை. நறவத்தின் இதழில் செவ்வரி உண்டு. இதனை 'வரி இதழ் அனிச்சம்' என்று ஒன்றுகொண்டு அனிச்சத்தை நறவ மாகக் கொள்ள இயலாது. வரியுள்ள மலர்கள் மேலும் பல உள்ளன. - அடுத்த சுள்ளி’ என்பது தனியொரு மரம். அனிச்சம். நறவம், சுள்ளி எனும் இவை மூன்றும் வெவ்வேறானவை என இலக்கியங்கள் தனித்தனியே பெயர்குறித்துக் காட்டியுள்னன. குறிஞ்சிப் பாட்டில் கபிலர், 62 ஆம் அடியில் அனிச்சத்தையும், 66 ஆம் அடியில் சுள்ளியையும், 91 ஆம் அடியில் நறவத்தையும் வெவ்வேறாகக் காட்டி யுள்ளார். பெருங்கதையில் குறிஞ்சிப் பாட்டைப் போன்றே மலர்களைப் பட்டியலிடும் கொங்கு வேளிர் இலாவான காண்டத்தில், மாசன மகிழ்ந்தது பகுதியில் ஒர் அகவற் பாடலிலேயே-, 12ஆம் அடியில் அனிச்சத்தையும், 15ஆம் அடியில் நறையையும், 22 ஆம் அடியில் சுள்ளியையும் தனித்தனி வெவ்வேறாகக் காட்டியுள்ளார். எனவே, அனிச்சத்தின் மறுபெயர்களாகக் கூறப் பட்ட இவ்விரு பெயர்களும் வேறுவேறாக உள்ளமை குழப்பத்தைத் தருகின்றது. நறவம், சுள்ளி என்னும் சொற்களுக்குரிய வேறு பொருட்டன்மை அனிச்சத்திற்கு உண்டமையாயிருந்து அதன் கரணியமாக இப்பெயர்கள் அறிவிக்கப்பட்டிருக்கலாம். அனிச்சத்தை ஆய்ந்த மூலிகை அறிஞர் இரா. குமாரசாமி அவர்கள், அனிச்சத்தை நறவமாகவும் காண்கின்றார்கள். ஆன காலிசு, மாஞ்சரோகிணி என்பவைதாம் அனிச்சம் என்றும் எழுதி யுள்ளார்கள். ஆனகாலிசு என்பது காட்டுச்செடி. இதன் மலர் காற்றில் உள்ள ஈரப்பதத்திற்கு ஏற்பக் குவியும் அல்லது மூடும். மாஞ்ச ரோகிணி என்னும் மூலிகையும் இத்தகையதே. இவையிரண்டும் ரப்பதத்தால் குவிவன. அனிச்சம் மூச்சின் ஈர்ப்பு வளியான