பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/731

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
5. வடக்கு மலர்,

வட வனம்.

வடபுலம், வடமலை, வடபொழில், வடமீன், வடமொழி, வடவளம் எனுந்தொடர்கள் சங்கப் பாடல்களில் உள்ளன. இவற்றுள் வடக்குத் திக்குச் சொல் உளது. வடக்கிலிருந்து வரும் வாடைக் காற்று வடந்தை எனப்பட்டது. இவைபோன்று குறிஞ்சிப்பாட்டில், - "வடவனம் வான்கை வான்பூங் குடசம்' - என வடவனம் பாடப்பட்டுள்ளது. இது வடவனப் பூ. வனம் என்றால் காடு. இப்பொருளில் நான்மணிக்கடிகை மட்டும் பாடியுள்ளது. பிற சங்கப் பாடல்களில் இச்சொல் இல்லை. இச்சொற்பொருள் கொண்டு வடபுலத்திலிருந்தும் வந்த குறிப்பிடத் தக்க மலர் மிகுதியாகப் பூப்பதால் இப்பெயர் பெற்றுள்ளது. அல்லது ஒரு மரமே மிகுதியாகக் காடுபோன்று பம்பித் தழைப்பதாக விருக்கலாம். - - இச்சொற்பொருள் கொண்டன்றி விளக்கம்பெற வாய்ப் பில்லை. செடியியலாரும் அனிச்சம், போங்கம் போன்று இதற்கும் செடியியல் பாகுபாட்டுப் பெயரை அமைக்கவில்லை. எனவே, விவரம் அறிய இயலாத அரிய மலர். கோட்டுப் பூ என்று கொள்ளலாம். 6. ಅ–55 மலர். அதவம் - அத்தி. அகவிதழ் முதலிய உறுப்புக்கள் இருந்தும் அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் பூக்கள் உள. கண் களால் காண்பதற்கு அரியவை என்னும் அளவில் இவை அரிய மலர்கள். இவ்வருமையை வைத்தே 'பூவாதே காய்க்கும் மரமும் உள" எனப்பட்டது. இவற்றைக் கொண்ட மரங்களுக்குக் கோளி' என்று பெயர் சூட்டின நிகண்டுகள். கோளி என்னும் சொல் கொள்ளுதலை உடையது' என்னும் பொருளது. புறத்தே யன்றி அகத்தே தனக்குள்ளேயே பூவைக் கொள்வது கோளி. 1 குறி பா : 67. 8 நல் : 85, 2 நான். க 2. -