பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/746

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

726


எருக்கு புதராக வளரும் சிறு செடி. எனவே, இப்பூ புதர்ப் பூவாம் நிலப் பூ. பின்னே காட்டப்படும் அகநானூற்றுப் பாலைப் பாடலின் (301) படி இது பாலை நிலப் பூ. பல பருவத்தில் பூக்குமாயினும் கோடைப் பருவப் பூ. - - இது கொத்தாகப் பூப்பதால், 'குவியினர் எருக்கு’ எனப் படும். காம்பில் ஐந்து சிறிய புறவிதழ்கள் விரிந்ததும் அகவிதழ் கள் ஒரு குமிழாகத் தோற்றமளிக்கும். இக்குமிழ் வடிவம் அடியில் முனை வளைந்த ஐந்து பட்டையாக ஒட்டிய ஐந்து அகவிதழ் களின் முனை மொட்டையாக அழகிய காட்சி தரும். ஒட்டியிருந்த ஐந்து அகவிதழ்களும் விரித்து கிடைமட்டத்தில் நீண்டிருக்கும். இக்காட்சி இக்கால ஓவியர் தீட்டிக்காட்டும் ஐந்து முனைகொண்ட விண்மீன் வடிவத்தில் தோன்றும். அவற்றின் இடையே பொகுட்டும் மகரங்களும் சிறு கோபுரம்போல் தோன்றும். குமிழாக ஒட்டிய நிலையில் குவிந்து நிற்கும் இவ்வகவிதழ், 'குவிமுகிழ் எருக்கங் கண்ணி' (நற் : 220 . 2) 'குவிமுகிழ் எருக்கங் கண்ணியும்’ (குறுந் , 17 : 2) 'குவிமுகிழ் எருக்கிற்கோத்த மாலையன்’ (மணி : 8 : 14.5) "எருக்கின் குவிமுகிழ் விண்டல்” (குணநாற்பது : 31) -என்றெல்லாம் காலாகால இலக்கியங்களில் 'குவி முகிழ்' என்று அடைமொழி பெற்றது. இதுபோன்று புன்னையும் ஞாழலும் அடைமொழி பெறுமாயினும் அவை ஒரே வழிப் பெறுபவை. தணிகைப் புராணம் இக்குவி முகிழுக்கு ஒரு நோக்கங் காட்டி, எருக்கின் முகில் நோக்கும்’ என ஒரு பார்வையாகக் காட்டி இதன் முகிழ்'க்கு முத்திரையிட்டது. - இதில் வெண்ணிறப் பூவுண்டு. இஃது அருகியே கிடைக் கும். வெளிர் நீலம் பாவிய பூவே யாங்கனும் காணப்படும், வெள்ளெருக்கே சிறப்பாகப் பேசப்படும். . முன்னே குறித்தமை போன்று இது நறுமணங்கமழ்வதன்று. - விரை சார்ந்து அறியாத புல்லெருக்கங் கண்ணி'ா - -ளன. ಖrಚ್ಡGurಹಿಡಿತ கலம்பகம் இது நறுமணம் அண்டாதது எனக் காட்டியது. இது மணமற்றது என்பதனை மாற்று முறை மில் ஒரு பழம்பாடல் அகத்துறை நயத்துடன் குறித்துள்ளது. ! ఐr:, 5ు ; 99