பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/753

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
733


சமைப்பாள். அதற்குப் புளிமிதவை-புளிக்கூழ்" என்று பேயர்: •இப்பாட்டு இவற்றைக் கூறுகிறது. ஆயர் மகளுக்குத் தயிர் கிடைக்கும். ஏழையர் உப்பும் கிடைக்காதவர். அன்னார் வேளைக் கீரையைப் பறித்து உப்பில் லாமல் அவித்து வெளிக்கதவை மூடிவிட்டுத் தின்பர். இதனை நல்லூர் நத்தத்தனார், | . "குப்பை வேளை உப்பிலி வெந்ததை" -என்றார். வறுமை கொண்டோர்க்கு மட்டுமன்று அவலங்கொண்ட விலங்குகளுக்கும் இப்பூ உணவாகியது. தன் ஆண் மானைப் புலியிடம் பறிகொடுத்த பெண்மான் தன் குட்டியுடன், 'பூளை நீடிய வெகுவரு பறந்தலை வேளை வெண் பூக் கறிக்கும்’2 மாம். இங்கும் இதன் வெண்மை நிறம் குறிக்கப்படுவது போன்று பெருங்குன்றுார்க் கிழாரும், குமட்டுர்க் கண்ணனாரும் (பதிற்று :15, 90) பாடி யுள்ளனர். சிறு பூண்டின் பூவாகிய இது நிலப் பூ. மான் அலையும் ஆளில் அத்தமாகிய காட்டிலும் ஆயர்மகள் தெருக்குப்பையிலும் வளர்வதால் முல்லை நிலப் பூ. கார்ப்பருவத்தில் பூக்கும். இவ்வேளை 'நல்வேளை எனப்படும். நாய்வேளை, தைவேளை என்பன சமையலுக்காகா. நல்வேளையின் பூ மார்புச் சளிக்கு நல்மருந்து. குழந்தைகளுக்கு அவர்களின் அகவைக் கேற்ப இப்பூவின் சாற்றைத் தாய்ப்பாலுடன் கொடுக்க நீர்க் கோவை மார்புச்சளி நீங்கும். வயிற்று மந்தத்தைப் போக்கிப் பசியை உண்டாக்கும். அகத்தியர் குணபாடம், 'பாளைக் குழலே! பசிமெத்த உண்டாகும்' வேளைப்பூ என்றொருக்கால் விள்' -என்கின்றது. போரில் தோற்றவர் நாடு அழிபட்டதைக் குறிப்போர், "வேரறுகை பம்பிடச் சுரைபடர்ந்து வேளை பூத்து ஊரறிய லாகா கிடந்தனவே' (முத்தொள்.) என வேளை வளர்வதைக் குறிப்பர். இவ்வகையில் எருக்கின் பட்டியலில் இணையும் எளிய மலர். எளியோர்க்கும் உணவாகி ஏற்றமுள்ள "புளிமிதவை உண்டியாகவும் அமையும் "புளிக்கூழ் மலர்' ஆகின்றது. - 2. புறம் : 28 :20, 21