பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
50


அம்மரபையும் முறையையும் நெறியாகக் கொள்ளும் : இந் நூலில் இடையீடும் விடுபாடும் நேரா. சொல்லாய்வு, மொழி வரலாறு, பொருளாய்வு கொண்டு மலர்கள் விளக்கப்பெறும். பயன், சுவை, நயம் கானும் இலக்கியத் திறனாய்வு அமையும். பூக்களைப் பற்றிய ஆய்வும், இலக்கியத் திறனாய்வுமாகும் இந்நூல் பூவின் வரலாற்று நூலாகும். பூவிற்குத் தனியாக வாழ்வியல் வரலாறு உண்டு. அவ் வரலாறு மணக்கும் : இனிக்கும். அதனைப் பூவே இதழ்விரித்துத் திருவாய் மலரும்.