அதிலும்,
"ஒரு பெயர்’ என்றது எனக்கென உரிய ஒரு பெயர்' எனச் சுட்டுவதாக உள்ளது. 'ஒரு' என்னும் சொல் இலக்கியப் பாங்கில் குறிக்கத் தக்க ஒன்று' - 'தனித் தன்மையுடையது' என்னும் பொருளைத் தரும். இதன்படி, இங்கு 'ஒரு பெயர்' என்றது எனக்குரிய இயற்பெயர் பூ என அறிவிப்பது போன்று உள்ளது. இவ்வாறு பொருள் கொள்வது நேர்நோக்குப் பார்வை அன்று; பக்கப் பார்வை. இக்கருத்துக்குத் துணையாக நிகண்டு களும் இலக்கிய இலக்கணங்களும் நிற்கின்றன. யாவற்றாலும், எனது இயற்பெயர் 'பூ' என்று என்னை அறிமுகம் செய்து கொள்கின்றேன்.
"பூ பூ!’ என என்னைச் சொல்லும் வாய் பூவாய் இதழ் விரிக்கும். சிறுவாய் மலர்ந்த 'பூவோ பூ” பாடலைப் பார்த்தாள் அடுத்தடுத்து எனது பெயரைச் சொல்லிச் சொல்லித் தன்வாய்க்கு மணம் கூட்டிக்கொள்வதைக் காணலாம். என்னைச் சொன்னாலும் வாய் மனக்கும். எண்ணினாலும் உள்ளம் உவக்கும். மனத்தால் எண்ணுவது மட்டுமன்று: எண்ணால் எண்ணினாலும் எண்ணமும் கமழும்; எண்ணும் சிறக்கும். எனது வரலாறும் வளரும்
பூவோ பூ" பாடலில் எத்துணை இடங்களில் என் பெயரை அமைப்பது என்று திட்டமிட்ட எண்ணிக்கையில் அமைக்கவில்லை. பாட்டுப் போக்கில் ஏழு இடங்களில் என் பெயர் அமைந்துள்ளது. நானும் எண்ணிப் பார்த்தேன்.
பாடிய சிறுமிக்குத் தொல்காப்பியம் தெரியாது. பாட்டு தந்த பாட்டி தொல்காப்பியர் எத்துணை இடங்களில் என்பெயரை வைத்துள்ளார் என எண்ணிப் பார்த்திருக்கவும் மாட்டாள். - தொல்காப்பியரே ஏழு இடங்களில் வைக்கவேண்டும் என்று கருதி வைக்கவும் இல்லை. இயற்கையாக நூலில் பரவலாக அமைந்த இடங்கள் வருகின்றன: -
“பூ என் ஒரு பெயர் 2 'எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் 3 'மாபெரும் தானை மலைந்த பூவும்” "வண்டே இழையே வள்ளி பூவே”
2 தொல் எழுத்து: 269 - - 3 தொல் : பொருள்: 21,88, 92, 140, 6 7, 18%
பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/91
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
55
