பக்கம்:இலக்கியம் ஒரு பூக்காடு.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
56


'அடிசிலும் பூவும் தொடுதற் கண்ணும்" "சினையே குழையே பூவே அரும்பே' "பூப்பின் புறப்பாடு” இவ்வாறமைந்த எண்ணிக்கை ஏழை, என் பருவ வளர்ச்சி எண்ணிக்கை யாக்கிக்கொள்கின்றேன். ೯ಲ್ಲಿಕು 05:16 50 1. நனை; 2. அரும்பு; 3. முகை, 4. போது, 5. மலர்; 6. அலர்; 1. வீ - என்பன. செடி, கொடி, மரங்கள் என்னைப் பெற்றுத் தரும் தாய் தந்தையர். காம்பும் தண்டும் என்னை ஏந்தி வளர்க்கும் செவிலித் தாயர். இலையும் தழையும் தளிரும் என்னைச் சூழ்ந்து போற்றும் தோழிமார். பிறந்து வளர்ந்து நிறைவடையும் எனது வாழ்வின் பருவம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தன்மைபெற்றது. தன்தன் தன்மைக்கு ஏற்பப் பொருள் பொதிந்த பருவப் பெயர் பெற்றது. அப்பொருட் பொலிவைச் சொல்வதும் ஒரு தனிச் சுவை; கேட்பதும் ஒரு தனிச் சுவை. இஃது எனது பிறப்பாம் தோற்றப் 1. நனைப் பருவம். உங்களது பாங்கில் கூறினால் பருவம் அறைக் குழந்தைப் பருவம். இந்த எனது தோற்றத்தில்புறத்தேயும் நீர்ப்பிடிப்புள்ள ஈர நணைப்பு தோன்றும். அகத்தேயும் நெய்ப்பு (எண்ணெய்) பிடிக்காத நீர்நைப்புள்ள தேன் நனைப்பு தோன்றும். இந்தத்தேன் நணைப்புதோன்றுவதை 'நனையினால் தோன்றும் நறா' என்றார் விளம்பி நாகனார். இந்நணைப்புகளால் நான் நனை' என்னும் பெயரோடுதோன்றினேன். நனைஎன்பதற்குத் தோற்றம்என்றொரு பொருள் உண்டு. இதனை, நனை மகிழ்' என்னும் தொடருக்குத் தோன்றிய மன மகிழ்ச்சி' என நச்சினார்க்கினியர் காட்டியுள் ளார். எனவே, எனது தோற்றம் என்னும் கருத்திலும் 'நனை' 4 நான், க: 50, 6 சிறுபாண் : 87 உரை. 5 சிறுபாண் : 67.