பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


வயிறு பெறுகிற வேதனை நேரத்தில், வாயிலிருந்து வருகிற வார்த்தைகளை இங்கே நாம் வருணிக்கத் தேவையில்லை.

பசியால் வயிறு காய்ந்தாலும், நிறைய உணவால் வயிறு கனத்தாலும், நேர்கிற துன்பம் ஒன்று தான்.

இல்லாமையால் ஏற்படுகிற இயலாமையை விட, வயிற்றுச் சோர்வு பெரிது. கொடிது.

அப்படி இல்லாமல் அளவோடு உண்டு நலமாக இருந்து, வளமோடு வாழ்ந்து, பலமாக வாழவேண்டும் என்று விரும்புகிற எல்லோரும், நாகாக்க வேண்டும். இல்லையேல், 'சோகாப்பர் சொல் இழுக்கப்பட்டு' என்று நாமும் தைரியமாகக் கூறலாம் அல்லவா!