பக்கம்:இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இலக்கியம் சிந்தும் விளையாட்டு இன்பம்

73



"பாப்பாத்தி அம்மா! மாடு வந்திடுச்சு, கட்டுனா கட்டுங்க. கட்டாட்டிப்போங்க."

இந்தப் பேச்ச, மாடு மேய்க்கும் பொறுப்பு உள்ள வேலைக்காரர்கள் வாயிலிருந்து உதிர்வதாக அல்லவா இருக்கிறது!

மாட்டை கொட்டிலிலிருந்து அவிழ்த்து விட்டு, மேய்ச்சல் நிலத்திற்குக் கொண்டு சென்று, பத்திரமாக மேயவிட்டு, மாலையில் வீட்டிற்குக் கொண்டு வந்து கட்டி விடுகிற வரை, அவரது கடமை உண்டு.

என்றாலும், வீட்டிற்குள் மாடுகளை விட்டு விட்டு, உங்கள் பொறுப்பு என்று ஒதுங்குவது என்ன மரபு? என்ன கடமைப் பற்று?

பார்ப்பானும் தீர்ப்பானும்

'மாட்டுக்குப் பொறுப்புள்ள அம்மையை பாப்பாத்தி' என்பது பழமொழி, மாட்டுக்குப் பொறுப்புள்ள மனிதரை பார்ப்பான் என்கிறது திருமந்திரம்.

பார்ப்பான் என்றால் பார்ப்பவன். அதாவது பத்திரமாகப் பார்த்து, வழியறிந்து பாதுகாப்பவன் என்பது பொருள்.

அப்படிப் பார்க்கும்போது, உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும், மனுஷியும் பார்ப்பான் தான்.

இந்தக் கருத்தை திருமூலர் எப்படி வலியுறுத்துகிறார் பாருங்கள்.

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு
மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன
மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்
பார்ப்பான் பசு ஐந்தும் பாலாய்ச் சொரியுமே (2843)