பக்கம்:இலக்கிய அணிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53


இன்று’ என்ற திருக்குறளுக்கு உரை கூறுமிடத்துப் பரிமேலழகர், ‘தொன்றுதொட்டு வருதல் - சேர சோழ பாண்டியர்’ என்றாற்போலப் படைப்புக் காலர் தொடங்கி மேம்பட்டு வருதல்’ என்று விளக்கவுரை கண்டுள்ளார்.

மன்னர்களை மக்கள் மதித்தமை

0. 2. மேற்கூறிய காரணங்களால் இமிழ்கடல் வேலித் தமிழகம் விளங்கத் தன்கோ னிறீஇத் தகைசால் சிறப்பொடு’ வாழ்ந்த முடியுடை மூவேந்தர்தம் தொன்மை அறியப்படும். மேலும்,

“ கெல்லும் உயிரன்றே நீரும உயிரன்றே

மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம் ‘

என்ற சங்ககாலப் புலவர் மோசிகீரனர் கூற்றுப்படி மன்னனே மக்களின் உயிராக ஒளிர்ந்தான். ‘திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே’ என்ற கம்மாழ்வார் கூற்று இடைக்காலத்திலும் மன்னன் மக்க வளிடம் பெற்ற மதிப்பினே நுவலாகிற்கும். சேக்கிழார் பெருமாலும்,

‘ மண்ணில் வாழ்தரு மன்னுயிர் கட்கெலாம்

கண்ணும் ஆவியும் ஆம்பெருங் காவலன்’

என்று குறிப்பிட்டுள்ளார் கம்பாாடர் இம் மரபினை,

திருக்குறள்: 955

பதிற்றுப்பத்து: இரண்டாம் பதிகம்: 5.6. புறநானூறு: 18 : 81-2. நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்; நம்மாழ்வார் திருவாய்மொழி:

418.

மி. பெரியபுராணம்; நகரச் சிறப்பு: 11.