உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

இலக்கிய அமுதம்


பார்த்து மக்களுக்கு நேரும் ந ல ன் தீமைகளைக் கணித்துக் கூறுபவன் இக்காலத்தில் சோதிடன் எனப்படுகிருன்; அக்காலத்தில் கணியன்' எனப் பட்டான். பூங்குன்றம் என்ற ஊரில் வாழ்ந்த கணி யன் ஒருவன், கணியன் பூங்குன்றன் என்று பெயர் பெற்ருன். அக்கணியன் தன் தொழிலோடு நில் லாது, பைந்தமிழைப் பாங்குறக் கற்றுப் பெரும் புலவனுகவும் விளங்கினன். -

சங்க காலப் பெரும் புலவர்களான நக்கீரர், கபிலர், பரணர் இவர்தம்.வரிசையில் வைத்து எண் ணத் தக்க பெரும் புலவகை அப்பெருமான் விளக்க முற்றிருந்தான். அப்ப்ெரிய்ோன் அருளிய பாட லொன்று புறநானூற்றில் (192) உள்ளது. பழந் தமிழர் கொண்டிருந்த சீரிய கருத்துக்கள்ை அப்பா வில் வைத்துப் புலவன் பாடியுள்ளான்.

புலவர் பொன்னுரை

(1) "எமக்கு எந்த ஊரும் எமது ஊரே, எல் லோரும் எம்முடைய சுற்றத்தார். (2) ஒருவனுக்குக் கேடோ ஆக்கமோ வருவது அவளுல்ேயே தவிரப் பிறரால் அன்று. (3) சாதல் என்பது புதியதன்று; கருவில் தோன்றிய நாளே தெர்டங்கியுள்ளது. ஆதலால் வாழ்தலை இனியது என்று மகிழ்ச்சி அடையவில்லை. ஒரு வெறுப்பு வந்தபோது இது கொடியது என்று எண்ணவுமில்லை. (4) பேரியாற்று நீரின் வழியே செல்லும் மிதவை போல நமது அரிய உயிர் ஊழின் வழிப்படும் என்பது அறிஞர் நூலால் தெளிந்திருக்கிருேம். ஆகவே நாம் நன்மையால் மிக்கவரை மதிப்பதும் இல்லை; அவ்வாறே நன்மை யால் சிறியோரைப் பழித்தலும் இல்லை.” -

விளக்கம்

(1) இக்கூற்றின் கருத்து யாது? பண்டைக் காலத் தமிழர் பல நாடுகளுக்குச் சென்று வாணிகம்