6. பூங்குன்றனர் பொன்மொழிகள்
சங்ககாலப் புலவர்
சங்ககாலத்தில், இன்று நமது சமுதாயத்தி லுள்ள முதலியார், பிள்ளை, செட்டியார், ஐயர், ஐயங் கார் என்ற சாதிப் பெயர்களோ சாதிகளோ இருந்த மைக்குச் சான்று இல்லை. இயற்பெயர் சாத்தன்' என்று இருந்தால், அச்சாத்தன் மரியாதைக் குரிய வகை ம்ாறும்பொழுது 'ஆர் விகுதி கொடுக்கப்படும். அவன் சாத்தனர் என வழங்கப் படுவான்; கபிலன், கபிலர் என்று வழங்கப் படுவான். அவன் இன்ன ஊரினன் என்பதைக் குறிக்க ஊர்ப்பெயர் பெய ருக்கு முன் குறிக்கப்படும்; சீத்தலைச் சாத்தனர்', "உறையூர் மோசியார் என்ருற்போல வரும். ஒரே ஊரில் ஒரே பெயர் கொண்ட புலவர் பலர் இருப்பின், அவர் செய்து வந்த தொழிலால் வேறுபாடு குறிக்கப் படும்; கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனர்' என்ருற் போல வரும். பிறந்த ஊர் வேருகவும் தங்கித் தொழில் நடத்தும் ஊர் வேருகவும் இருந்தால் இவ் விரண்டு ஊர்களையும் அவன் செய்யும் தொழிலையும் அவனது இயற் பெயரையும் சேர்த்து வழங்குதல் பண்டை மரபு; சீத்தலை என்னும் ஊரிலே பிறந்த சாத்தனர் மதுரையில் கூலவாணிகராக இருந்தார் என்பதை உணர்த்த மதுரைக் கூலவாணிகன் சீத் தலைச் சாத்தனர்' என்று குறிக்கப்பட்டார்.
மயிலையார், நாகையார் என்ருற் போலப் பிறந்த ஊரால் பெயர் பெற்ருேர் பலர். பூங்குன்றம் என்பது பாண்டிய நாட்டு ஊர்களில் ஒன்று. இன்றைய இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மகிபாலன் பட்டியே சங்ககாலத்தில் பூங்குன்றம் எனப் பெயர் பெற்றிருந்தது என்பது கல்வெட்டால் தெரிகின்ற உண்மையாகும். கோள் நிலைகளைக் கணக்குப்
3 -