36
இலக்கிய அமுதம்
தம் மன்னைேடு போர்க்களம் புகுந்து, அவனை அவ்வப்போது ஊக்கப்படுத்தி, அவளுேடு இன்புற் றும் துன்புற்றும் வாழ்ந்த புலவர்களும் உண்டு. கபிலரும் ஒளவையாரும் இத்துறைக்கு ஏற்ற சான்ருவர். -
புலமை புலமைக்காகவே' என்பது பண்டைக் காலக் குறிக்கோளாகும். மருத்துவர், கொல்லர், கூலவாணிகர், பேரிகை அடித்து வாணிகம் செய்த வர், வளமனையைப் பாதுகாத்த காவற் பெண்டிர், குயத்தியர், குறத்தியர் முதலிய பலரும் தத்தம் தொழில்களைச் செய்துகொண்டே பெரும் புலவர் களாகத் திகழ்ந்தனர். அவர்கள் மக்களிடம் காணப் பட்ட வீரம், கொடை, அன்பு, அருள் முதலிய நற். பண்புகளைப் பாராட்டிப்பாடிய பாடல்கள் பலவாகும். புலவர்கள் அரசர்பால் பரிசில் பெற்று மீண்டும் தம் ஊர் செல்லும்போது வள்ளல்களை நாடிச் செல் லும் புலவர்கள்ை வழியில் சந்திப்பதுண்டு; உடனே அவர்தம் வறுமையைப் போக்க விழைந்து, அவர் களைத் தமக்குப் பரிசில் ஈந்து மகிழ்ந்த மன்னர்பால் ஆற்றுப்படுத்துதல் வேண்டும். தமக்குப் பரிசில் தந்த மன்னனுடைய சிறப்பியல்புகள், அவனது அரண்மனைச் சிறப்பு, நாட்டுச் சிறப்பு, நகரச்சிறப்பு, அந்நகரத்திற்குச் செல்லும் வழி பற்றிய விவரங்கள் இன்ன பிறவற்றைப் பரிசில் பெற்று மீளும் புலவர், வழியில் காணப்பட்ட புலவர்க்கு விரித்துரைத்து, அவரை அவ்வள்ளல்பால் ஆற்றுப் படுத்தல் ஒரு நீண்ட பாவாக அமையும். இங்ங்னம் அமீைந்தி பாட்டுப் புலவர் ஆற்றுப்படை எனப்படும். இங்ங் னமே பாணரை ஆற்றுப்படுத்தலும் உண்டு. அது. பாண் ஆற்றுப்படை எனப்படும். இவ்வாறே விற லியை ஆற்றுப்படுத்தலும் உண்டு. அது விறவி ஆற்றுப்படை எனப்படும். இப்படியே கூத்தரை ஆற்றுப் படுத்தலும் வழக்கம். அது கூத்தர் ஆற்றுப் படை எனப் பெயர் பெறும். இத்தகைய ஆற்றுப். படைப் பாடல்களைப் பத்துப் ப்ர்ட்டில் காண்லாம். புறநானூற்றிலும் பல பாடல்கள் உண்டு.