உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

இலக்கிய அமுதம்


கடை-இங்கே பொருள் வாங்குதல் கூடாது' என்ற எண்ணம் அவனது பண்பட்ட உள்ளத்தில் தோன்றவில்லை. இவ்வுயரிய பண்பாடு தமிழனை வாழ வைப்பதாக இல்லை; அஃதாவது, பண்பாட்டு அளவில் வாழ வைக்கின்றது; பொருளாதார அள வில் வாழ்விக்கவில்லை.

(2) மனிதன் தன் நற்செயல்களால் தன்னை உயர்த்திக் கொள்கிருன். தன் திச் செயல்களால் தன்னைத் தாழ்த்திக் கொள்கிருன் ” என்று விவேகானந்த அடிகள் கூறியுள்ளார். "மனிதன் ஆவதும் அழிவதும் தன்னலே தான்” என்று ஜேம்ஸ் ஆலன் எனனும் மேனுட்டு அறிஞன் புகன் றுள்ளான். ப்பேருண்மையையே ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன் கணியன் பூங்குன்றனர் கழறியுள்ளார்-"தீதும் நன்றும் பிறர்தர வாரா" எனறு.

மனித வாழ்க்கையைப் பக்குவப் படுத்தும் இவ்வுயரிய உண்மையை அறிந்தவர் எத்துணையர்? மனிதன் தன் சொல்லாலும் செயலாலும் பொதுமக் கள் உள்ளங்களைக் கவர்கிருன்; அவ்வாறே தன் தீய சொல்லாலும் செயலாலும் பொதுமக்கள் வெறுப்புக்கு ஆளாகிருன்; கோள் சொல்லுவது, பிறர் வெறுக்கும் செயல்களைச் செய்தல் முதலிய இரு செயல்களால் பலராலும் வெறுக்கப்படுகிருன். இங்ங்னம் பலர் வெறுப்புக்கும் காரணம் அவனே தவிரப் பிறர் அல்லர். "நான் அவளுல் கெட்டுவிட் டேன், இவரால் இக்கேடு நேர்ந்தது” என்று தன் கேட்டிற்குப் பிறரைக் குறை கூறும் மக்கள் இந்த உண்மையை உணர்வதில்லை.

இந்த உண்மையை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து விட்டால், அவனது வாழ்வு செம்மைப் படும். கணக்கற்ற அறநூல்களைப் படிப்பதாலோ சமய நூல்களைப் படிப்பதாலோ ஒருவன் பெறும் பயனைவிட இப்பயன் மிகப் பெரியது; உயர்ந்தது.