7. அகநானூறு - 1
சங்க நூல்கள்
இற்றைக்கு 1700 ஆண்டுகளுக்குமுன் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்ப் புலவர் பலர் இருந்து தமிழாராய்ந்தனர். அக்காலத்தில் செய்யப்பட்ட நூல்கள் 'சங்க நூல்கள்” என்றும், அக்காலம் "சங்க காலம்” என்றும் பெயர் பெற்றன. அக்காலப் புலவர்கள் பேரரசரையும் சிற்றரசரையும் நாடிச் சென்று தனிப் பாடல்கள் பாடிப் பரிசு பெற்றனர். அப்பாடல்கள் "அகப் பாடல்கள்” என்றும், “ புறப் பாடல்கள்” என்றும் இருவகையாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஒருவனும் ஒருத்தியும் காதல்கொண்டு வாழும் வாழ்க்கை பற்றிய பாக்கள் "அகப் பாக்கள்” எனப்படும். அறம், பொருள், வீடு பற்றிய பாக்கள் “புறப் பாக்கள்” எனப்படும்.
அகப்பாக்கள் அகநானூறு, நற்றிணை, குறுந் தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை என ஐந்து நூல்களாகத் தொகுக்கப் பெற்றன. புறப்பாக்கள் புறநானூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல் என்று மூன்று நூல்களாகத் தொகுக்கப் பெற்றன.
அகப்பொருள் விளக்கம்
பண்டைக் காலத்தில் ஒருவனும் ஒருத்தியும் தாமே எதிர்ப்பட்டுக் காதல் கொண்டு மணந்து கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. அம் மணம் களவு”, “கற்பு' என்று இருவகைப்படும். பெற்ருேரும் பிறரும் அறியாமல் காதலர் வாழ்கின்ற நிலை களவு” எனப்படும். பெற்ருேர் அறிய