உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலக்கிய அமுதம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேக்கிழார் பெருமான்

67


சேரணுட்டுச் சிறப்பும் தாவிய முறைக்கேற்ப ஆசிரிய ராற் கூறப்பட்டன. சேக்கிழார், திருத்தொண்டத் தொகைப் பாடல்கள் 11-ஐயும் 11 சருக்கங்களாகக் கொண்டார்.

ஒவ்வொரு சருக்க முடிவிலும் சுந்தரரைப்பற்றிப் பாடிச்செல்வது, பெரிய புராணம் ஒரு தொடர் நிலைச் செய்யுள் என்பதை வற்புறுத்துவதற்கே என்பது தெளிவாகும். சுந்தரர் கதை திருமலை (கயிலாய)ச் சருக்கத்தில் தோன்றி வெள்ளாளைச் சருக்கத்தில் முடிவதும் பெரியபுராணம் சுந்தரர் பற்றிய காவியமே என்பதை வலியுறுத்துவதாகும். பெருங் காவியத்து இலக்கணங்களான நாற்பொருள் கூறல் முதலியன இதன்கண் நன்முறையில் அமைந்துள்ளன என் பது கற்றவர் அறிந்ததே. இதனை ஒவ்வொன்ருகக் கூறின் விரியும். *

பெரும் புலமை

பெருங் காவிய நிலைக்கு ஒத்து விளங்கும் பெரிய புராணத்தைச் செய்த ஆசிரியர் சேக் கிழார் பெருமான், தமக்கு முற்பட்ட எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, திருக்குறள், சிலப்பதிகாரம், மணி மேகலை, சிந்தாமணி என்னும் பழைய இலக்கியங் களைப் பழுதறப் படித்த பெரும்புலவர் என்பது அவரது காவியத்தால் அறிய முடிகிறது.

சேக்கிழார் முதல் ஏழு திருமுறைகளையும் அழுத் தந்திருத்தமாகப் படித்து இன்பப்பட்டவர் என்பது அவர் கூறியுள்ள மூவர் புராணங்களிலிருந்து நன் குணரலாம். சேக்கிழார் அத் திருப்பதிகங்களைத் தம் புராணத்தில் கையாண்டுள்ள சில முறைகளைக் காண்போம்: (1) பல இடங்களில் பதிக முதற் குறிப்பே தரப்பட்டுள்ளது.

பித்தாபிறை சூடி எனப் பெதொந்திருப் பதிகம் இத்தாரணி முதலாம் உல கெல்லாம்.உய எடுத்தார்'