94
இலக்கிய அமுதம்
வழங்கி வடமொழிக் கல்வியை வளர்த்தனர். தமிழ்ச் சிவ் நெறியோடு புதிய வைதிக நெறியும் சங்ககாலத் திலேயே இணைப்புண்டது. அவ்விணைப்புப் பல்லவர் காலத்தில் உறுதிப்பட்டது. தங்கள் சிவ-மால் நெறி களை வளர்க்க இடையூருக இருந்த சமண பெளத்தங் களை ஒழிக்கத் தமிழ்ச்சைவரும் வைணவரும் வைதிக ரோடு சேர்ந்து சமயப் போரில் குதித்தனர்.
சங்ககாலத்திற்குப் பின்பு ஆட்சிமுறை மாறு பாட்டாலும், அரசர்கள் சமயத்துறையில் நடுவு நிலைமை காட்டத் தவறியதாலும், ஒவ்வொரு காலத் தில் ஒவ்வோர் அரசன் பாராட்டிய சமயமே உயர் நிலையில் இருந்தது. இந்நிலையில் சமணமும் பெளத் தமும் தம்முள் போரிடலாயின. இவ்வாறே பெளத் தம் சமணத்தோடு பிற சமயங்களையும், சமணம் பெளத்தத்தோடு பிறசமயங்களையும் எதிர்த்து நின் றன. இறுதியில் சமணம் வெற்றி பெற்றது. கி.பி. 7-ஆம் நூற்ருண்டின் முற்பாதியில் தமிழகம் முழுவு திலும் சமணமே மிக்க செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது. -
கி.பி. 7, 8, 9-ஆம் நூற்ருண்டுகளில் சைவர்க் கும் சமணர்க்கும், வைணவர்க்கும் சமணர்க்கும் மேலே சுட்டப்பெற்றவாறு சமயப் போர் நண்ட பெற்றது. திருநாவுக்கரசரது இடைவிடாத பிரசா ரத்தால் பல்லவநாடு சைவ நாடாக மாறியது; சம் பந்தரது பிரசாரத்தினுல் பாண்டிய நாடு சைவ நாடாக மாறியது. சமணரையும் பெளத்தரையும் சைவரும் வைணவரும் வென்றனர்.
சமணம் பெளத்தம் ஆகிய இரண்டின் செல் வாக்கையும் பெரிதும் குறைத்துவிட்ட சைவ வைணவ சமயங்கள் சோழர் கால்த்தில் தம்முள் ளேயே போரிட்டுக் கொண்டன என்பதைக் கல் வெட்டுக்களாலும் நூல்களாலும் அறியலாம். இராமா நுசர் சோழநாட்டைவிட்டே ஓடவேண்டிய நிலைமை ஏற்பட்டது. இரண்டாம் குலோத்துங்கன் தில்லைக் கோவிந்தராசர் சிலையைப் பெயர்த்துக் கடலில்