பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 இலக்கிய அமைச்சர்கள் யான் செய்வன செய்தேன்; அவன் எனக்குச் செய்வன செய்க ; நீ பொருமையால் சிறிதும் புகலவேண்டா, என்று சினந்து மொழிந்தான். அமைச்ருன் அறிவுரை நிமித்திகன் அறம் பிறழாத திறமுடைய நல் லமைச்சதைலின் முதற்கண் பொதுவகையால் அரச னுக்கு அறிவுறுத்தின்ை. அரசன் அறிகொன்று அறி யான் எனினும் உழையிருந்த அமைச்சன் உறுதி உரைக்கும் கடப்பாடுடையணுதலின் சிறப்பு வகையால் அவனை மேலும் இடித்துரைக்கத் தொடங்கின்ை. வேந்தே திலோத்தமையை விரும்பிய நான்முகன் விண்ணுலகை இழந்து வீயாப் பழியையும் சுமந்தான். மலையரசன் மகளை இடப்பாகம் கொண்ட ஈசனுர்க்கு என்றும் தீராத பழி சேரலாயிற்று. தொழுநையாற்றில் நீராடிய தோகையரின் துகிலைக் கவர்ந்து சென்ற கண்ணனுக்கு எந்நாளும் மாருத பழியே நேர்ந்தது. காமம் கனிய நின்ற ஓர் உயிர்ப் பொருளுக்கிரங்கியது குறித்துப் புத்தனும் இடுகாட்டில் விழுந்த மலர் மால் யாக இழித்துப் பேசப்பட்டான். பாண்டவர் ஐவரும் { { {TGö} 6}! ஒருத்தியையே மனைவியாகக் கொண்டமையால் இன்றளவும் பழி நின்று நிலவுகின்றது. இவற்றை யெல்லாம் அறிந்த நீவிரோ இவ்வாறு தையல்பால் கொண்டமையலால் மதியிழப்பது?' என்று மனத்தில் பதியுமாறு இடித்துரைத்தான். உருத்திரதத்தன் உரை நிமித்திகன் அறிவுரையைக் கேட்ட மன்னன் வாளாவிருந்தான். அது கண்ட உருத்திரதத்த்ன் என் னும் நல்லமைச்சன், மன்னனை அணுகி, அரசரேறே!