பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சச்சந்தன் அமைச்சன் 105 அரசகுமாரன் என்பதைப் பிறர் அறியா வண்ணம் ஒழுகி வந்தான். தன்னை வளர்த்த தந்தையாகிய கந்துக்கடன்பாலும் அவன் மனைவி சுநந்தையிடத்தும் மாருத அன்பு பூண்டு ஒழுகினன். தான் ஏமாங்கத நாட்டு அரசினை ஏற்கும் காலம் கைகூடி வரவே, சீவ கன் குதிரை வாணிகனைப் போல் வடிவு கொண்டு விதைய நாட்டை அடைந்தான். அந்நாட்டு மன்ன கிைய தன் மாமன் கோவிந்தராசனைக் கண்டு, கட்டியங் காரனை வெல்லுவதற்கு வேண்டியவற்றைச் சூழ்ந் தான. - கட்டியங்காரன் விடுத்த ஓலை அந்நாளில் கோவிந்தராசன், கட்டியங்காரன் தனக்கு வஞ்சனையாக விடுத்திருந்த ஒலையைக் காட்டி ன்ை. அவ்வோலையில், அசனிவேகம் என்னும் பட்டத்துயானை மதம்பட்டுப் பாகர் நூற்றுவரைக் கொன்று ஓடியது; சச்சந்தன் அதனை அடக்கிக் கந்திற் பிணிக்க முயன்றபோது அவ் யானையால் குத்துண்டு இறந்தான் ; இனி நீயே இந்நாட்டின் மன்னனுதல் வேண்டும் , யான் உயிரும் ஈவேன் ; நீ வரின் பழியும் ஒழியும் வருக, என்று குறித்திருந்தான். அதனல் கோவிந்தராசன் ஒருகால் தன்னை எதிர்த்து அழிப் பானே என்று அஞ்சி, அவனை வஞ்சனையால் ஒழித்து விட அழைத்துள்ளான் என்பது புலனுகின்றது. சீவகன் வெற்றி இதனையெல்லாம் கூர்ந்து நோக்கிய சீவகனும் கோவிந்தராசனும் அவனைத் தாம் இருக்குமிடம் அழைத்தற்கு உபாயம் சூழ்ந்தனர். பின்னர், திரிபன்றி