பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சச்சந்தன் அமைச்சன் 107 தரும் தேவாமுதமும் கொன்ருெழிக்கும். இதல்ை அறி வுடையார் கொல்லுதலையும் கொல்லப்படுத்லையும் தம தாகக் கருதார். நெய்யும் திரியும் தீர்ந்தபொழுதே விளக்கும் அவிந்து மறைந்து விடுதல் போல, நல்வினை அற்றபோதே அற்ருெழியும் செல்வத்தைப் பற்றி வைக்கவல்லார் உலகில்'இல்லை." - இவ்வாறு 'அறநெறி பேசிய கட்டியங்காரனை நோக்கிச் சீவகன், ! நீ அஞ்சிய்ை போலும்,' என் ருன். அது கேட்ட கட்டியங்காரன், ‘வெல்வது விதியி லைன்றி வீரத்தாலன்று ; ஆதலால் அஞ்சுவது எதற்கு ? என்னை வேல்கொண்டு எறிந்தாலும் விழித்த கண்களை இமைத்தல் செய்யேன்,' என்று வீர இமாழி கூறினன். இருவரும் எதிர்த்துப் பொருதனர். அப்போரில் கட்டியங்காரன் மாய்ந்தான். சீவகன் வெற்றி கண்ட சேனை வெள்ளம் மகிழ்ச்சியால் துள்ளி ஆரவாரித்தது. இவ் வெற்றிச் செய்தியைக் கேள்வி யுற்ற விசயை சீவகனப் பெற்ற நாளினும் பெருமகிழ் வுற்ருள். - 齊 • சீவகளுல் வெல்லப்பட்ட கட்டியங்காரன் தீவி னையே உருவாகத் திரண்ட தீய அமைச்சனுயினும் ஆட்சியைத் திறம்பட நடத்தும் சூழ்ச்சித்திறன் உடைய வனுகக் காணப்படுகிருன். அதனுலேயே சச்சந்தல்ை ' வெளிறிலாக் கேள்வியன், என்று வியந்து போற்றப் பெறுகிருன். அவனிடத்தே புன்மைக் குணங்கள் பல பொருந்தியிருந்தன. அதல்ை ஆசிரியர் அவனைக் கரி மாலை நெஞ்சினன்,' என்று கடிந்துரைத்தனர்.