பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் அருண்மொழித்தேவர் 11] காடு கெடுத்து நாடாக்கிய கரிகால்வளவன் தொண்டை நாட்டை வளப்படுத்த நாற்பத்தெண்ணு யிரம் குடிகளை அந்நாட்டில் குடியேற்றின்ை. அக்குடி களே தொண்டை மண்டல வேளாளர் எனப்படுவர். இவ்வேளாளருள்ளே கூடல் கிழார், புரிசை கிழார், வெண்குளப்பாக்கிழார், சேக்கிழார் முதலிய சில குடியினர் சிறந்து விளங்கினர். அமைச்சராகிய அருண் மொழித்தேவர் சேக்கிழார் குடியில் அவதரித்தவர். அவருக்குப் பாலருவாயர் என்ருெரு தம்பியாரும் இரு ந்தனர். அருண்மொழித்தேவர் அமைச்சராதல் இளம்பருவத்திலேயே பலதுறை நூல்களையும் கற்றுணர்ந்த கலைஞராக விளங்கிய அருண்மொழித் தேவரின் ஆற்றலைப் பலர் வாயிலாகவும் அநபாய சோழ மன்னன் கேட்டுணர்ந்தான். அவரைத் தனது அரசவைக்கு வரவழைத்து முதலமைச்சர் பதவியை மனமுவந்து கொடுத்துதவின்ை. அவருடைய ஆட்சித் திறங்கண்டு வியந்து, உத்தம சோழப் பல்லவன் ' என்ற உயர்ந்த பட்டத்தையும் வழங்கிப் பாராட்டின்ை. சிந்தாமணி சிந்தை கவர்தல் அந்நாளில் சோழன் அநபாயன் கங்கை கொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு நாட்டைப் புரந்து வந்தான். அவனது ஆட்சியில் அமைச்சுரிமை பூண்ட அருண்மொழித்தேவர் சிறந்த சிவப்பற்றுடையா ராதலின் சோழ நாட்டுச் சிவத்தலங்களுள் ஒன்ருகிய திருநாகேச்சுரம் என்ற பெருநகரில் இருந்து தம் அரசியல் அலுவல்களை நடத்திவந்தார். இச்சமயத்தில் தான் சமண காவியமாகிய சீவக சிந்தாமணி, நாடெங்