பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் அருண்மொழித்தேவர் 118 கொண்டுள்ளான் ; அதனையே ஒதியும் ஒதக்கேட்டும் உவகை வெள்ளத்தில் திளைக்கிருன்’ என்ற செய்தியை அமைச்சராகிய அருண்மொழித்தேவர் அறிந்தார். நன்மை பயக்கும் உண்மைகளை அரசர்க்கு அறிவுறுத்த ஹேண்டுவது நல்லமைச்சர் கடனுதலின், உடனே அருண்மொழித்தேவர் அநபாயனை அணு கிர்ை. அரசே! நீவிர் சின்னுட்களாக இடையருது ஒதியும் ஒதக்கேட்டும் இன்புற்றுவரும் காவியம் சமண, சமயத்தைச் சார்ந்தது. இல்லதைப் புனைந்துரைக்கும் பொய்ந்நூல் அது. மன்னன் ஒருவன் மகளிர் எண்மரை மணந்து காதல் வாழ்வு நடத்திய காமக்கதை. அது இம்மைக்கும் மறுமைக்கும் எள்ளள்வு பயனும் தாராது. அருள்வளம் கொழிக்கும் சிவகதைகள் எண்ணிறந்தன உள. அவை இருமைக்கும் உறுதியைத் தரும். அவற்றை நீவிர் கற்றலும் கேட்டலும் வேண்டும். இன்றேல் நம் நாட்டிற்கு ஒவ்வாத புறச்சமயம் இங்குப் புகுந்துவிடும். இதனை நீவிர்அறிந்தருளல் வேண்டும்." என்று பணிவுடன் அறிவுரை ப்கர்ந்தருளினர். அரசன் வேண்டுகோள் அமைச்சரின் அறிவுரை கேட்ட அநபாயன் 'அங்ங்னமாயின் இருமைக்கும் பெருநலம் பயக்கும் சிவ கதை யாது? அதனைக் கற்றுணர்ந்த புலவோர் யாவர்? அதுவும் சிந்தாமணிய்ைப் போல் தோன்றிய கற்பனைக் கதையோ? அன்றிப் பழங்கதையோ? அதற்கு முதல் நூல் உளதோ? அதனைச் சொன்னவர் யார் ? அது தவம் பயக்கும் அருட் கதையோ ? தவஞ் செய்து தண்ணருள் பெற்ற புண்ணியர் கதையோ ? விளக்க மாக எடுத்துரைக்க” என்று வேண்டினன். இ. அ.-8 -