பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சர் அருண்மொழித்தேவர் 117 கண்டு மகிழ்ந்த மக்களெல்லாம், "இச் சேக்கிழார் பெரு மானுக்கு, இராமாயணத்தை வடமொழியில் தந்த வான்மீகி முனிவனும் இணையாகான்; பாரதத்தை வட மொழியில் பாடிய வேதவியாசனும் நேராகமாட்டான் ; ஆயிரம் நாப்படைத்த ஆதிசேடனும் ஈடாகமாட்டான்; பொதியத்தமர்ந்த முனியுங்கவனும் இவருக்கு நிக ராகான்," என்று பலவாறு பாராட்டினர். அமைச்சருக்குப் பட்டமளித்தல் தில்லைத் திருவீதிகளில் சேக்கிழாரை யானையின் மீது ஏற்றிப் பவனி கொணர்ந்த அரசன், அவருக்குத் 'தொண்டர் சீர் பரவுவார் ' என்ற பட்டத்தை வழங் கின்ை. திருத்தொண்டர் புராணத்தைப் பன்னிரண் டாம் திருமுறையாகச் சேர்க்குமாறு செப்பேட்டில் வரைந்தான். இன்று முதல் சைவத் திருமுறைகள் பன்னிரண்டாகும் என்று நாடெங்கும் பறையறையப் பணித்தான். அவருக்கு ஞானமுடி சூட்டி அடிபணிந்து வணங்கின்ை. அதன் பின்னர்ச் சேக்கிழார் தம் அமைச்சுப் பதவி இருந்து விலகி ஓய்வு பெற்ருர். தமது ஊராகிய குன்றத்திரை அடைந்தார். ஆங்குத் திருநாகேச்சுரம் బ్రిడ్జs: லப் போன்றதொரு திருக்கோவிலை இன்த்து வழிபட்டு வந்தார். ல்த்ருேரும் இயற்பெயரும் இத்தகைய சேக்கிழார் பெருமானின் பெற்ருேரைப் பற்றி உமாபதி சிவனர் தமது நூலில் ஒன்றும் குறிப் பிடவில்லை. சேக்கிழாரின் தந்தை வெள்ளியங்கிரி முதலியார் என்றும், தாய் அழகாம்பிகை என்றும் காது வழிச் செய்தியொன்று உலவி வருகிறது. இவரது