பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இலக்கிய அமைச்சர்கள் தனுக்குப் பெரும்பழி வருமாறு பிறந்தேனே என்று வருந்தி நைந்தான். இதற்குள் கன்றை இழந்த தாய்ப் பசு கண்ணிர் சொரியக் கதறிக் கொண்டு மன்னன் மாளிகை வாயிலை நண்ணியது. ஆங்குத் தூங்கிய மணி யினைக் கொம்பால் அசைத்து ஒலியெழச் செய்தது. மணியோசை கேட்ட மன்னன் பசுவின் கொம்பால் அசைக்கப் பெற்று ஒலித்த மணியின் ஒசை மனுவேந்தன் பழிப்பறை முழக்கைப் போன்றும், பாவத்தின் ஒலியைப் போன்றும், குல மைந்தன் ஆவியைக் கொள்ள வரும் கூற்றுவன் ஏறி வந்த வாகனத்தின் கழுத்தணி மணியின் ஒலியைப் போன்றும் பெருமுழக்குடன் ஒலித்தது என்று குறித் தார் சேக்கிழார். பழிப்பறை முழக்கோ ஆர்க்கும் பாவத்தின் ஒலியோ வேந்தன் வழித்திரு மைந்தன் ஆவி கொளவரும் மறலி ஊர்திக் கழுத்தணி மணியின் ஆர்ப்போ என்னத்தன் கடைமுன் கேளாத் தெழித்தெழும் ஒசை மன்னன் செவிப்புலம் புக்க போது." இவ்வாறு மணியோசை மனுவேந்தன் செவியிற் கேட்டதும் அவன் துணுக்குற்று அரண்மனை வாயிலை அடைந்தான். ஆங்கு நின்ற காவலர், "இதோ நிற்கும் பசுவே தன் கொம்பால் மணியை அசைத்தது, ' என்று பணிந்து மொழிந்தனர். மன்னன் அப்பசு விற்கு நேர்ந்த இன்னல் யாதெனக் கேட்பான் போலப் பக்கத்தில் நின்ற அமைச்சரைச் சற்றே நோக்கின்ை. அங்கு நின்ற அமைச்சன் முதிர்ந்த கேள்வியும் முது