பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுவேந்தன் மதியமைச்சர் 27. நூல் உணர்வும் பெற்றவன். அவன் முன்னுற நிகழ்ந்த செய்தியெல்லாம் அறிந்தவன். ஆதலின் நிகழ்ந்ததை அரசன் உள்ளம் கொள்ளுமாறு வகைப் படுத்தி உரைத்தான். " வளவ கின் புதல்வன் ஆங்கோர் மணிநெடுந் தேர்மேல் ஏறி அளவில்தேர்த் தானே குழ அரசுலாம் தெருவில் போங்கால் இளைய ஆன் கன்று தேர்க்கால் இடைப் புகுக்(து) இறந்த தாகத் தளர்வுறும் இத்தாய் வந்து விகளத்த(து)இத் தன்மை' என்ருன். அமைச்சன் சொல்வன்மை, அரசே நும் புதல்வன் தேரேறிப் படைகள் புடைசூழ அரச வீதியில் சென்று கொண்டிருந்தான். பயமறியாத இளங்கன்று எவ்ரும் அறியாம்ல் ஒடி வந்து தேர்ச் சக்கரத்தில் 蠶 இறந்தது. அதல்ை துயருறும் தாய்ப்பசு இச்செயலைப் புரிந்தது' என்று அவ் அமைச்சன் தெரிந்துரைத்தான். இங்ங்னம் கூறிய தனது மொழியால் அரசகுமரன் மீது யாதொரு குற்றமும் இல்லையென்பதை நன்கு வலியுறுத்தும் அமைச்சனது மதிநுட்பம் எண்ணி மகிழ்தற் குரியதாகும். அமைச்சன் நின் புதல்வன்' என்று கூறி மிகுந்த மகவாசையை ஊட்டின்ை. 'புதல்வன்' என்ற ஒருமைச் சொல்லால் குலத்திற்கே தனிமைந்தனுக இருக்கிருன் என்ற உணர்ச்சியை உண்டுபண்ணின்ை. அவன் நெடுந்தேர் ஏறிச் சென்ருளுதலின் கீழே நிகழ்ந்த செயலை அவன் அறியான் ; கன்று சக்கரத்தில்