பக்கம்:இலக்கிய அமைச்சர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனுவேந்தன் மதியமைச்சர் 29 கொன்ற பாவத்திற்குக் கழுவாயாக வேதியர் விதித்த - முறையில் நம் அரசகுமாானைச் செலுத்தலே அற மாகும் என்று எடுத்துரைத்தனர். அதுகேட்ட மன்னன், வேதியர் ஒதும் விதிப்படிக் கழுவாய் செய்துவிட்டால் இளங்கன்றை இழந்தலறும் தாய்ப் பசுவின் நோய்க்குத் தக்க மருந்தாகிவிடுமோ? நான் மகனை இழப்பேன் என்ற எண்ணத்தால் நீவிர் கூறிய வாறு குற்றம் புரிய இசைவேனுயின் தருமம் சலித்து விடாதோ? மாநிலம் காக்கும் மன்னன் மன்னுயிர்க்கு வரும் ஐவகை இன்னல்களையும் போக்கி அறத் தைக் காக்க வேண்டாவோ? என் மகன் இழைத்த தீங்கிற்குக் கழுவாய் செய்ய இசைந்து, பிறைெருவன் ஓர் உயிரைக் கொன்றதற்குத் தண்டனையாக அவனைக் கொல்வேனுயின் தொன்மையான மனுநூல் வகுத்த விதிகள் பிற்கால மனுவேந்தன் ஒருவல்ை அழிப் புண்டன என்னும் பழிச்சொல்லை யான் பெறுதற்கே அறிவுறுத்தினர் அமைச்சர்களே! இது முறை யாகுமோ?' என்று தன் அமைச்சர்களை இகழ்ந் துரைத்தான். அமைச்சர் இடித்துரைத்தல் தங்கள் கருத்தை மறுத்துரைத்த மன்னனுகிய மனுவேந்தனுக்கு மதியமைச்சர்கள் மேலும் இடித் துரைக்கத் தலைப்பட்டார்கள். “அரசே! உலகில் இத் தகைய நிகழ்ச்சி முன்னும் நிகழ்ந்துள்ளது. கன்றின் உயிருக்காக அரசகும்ரன் உயிரை அழித்தல் முறைமை யன்று. வேதம் விதித்தவாறு நடத்தல் தொன்று தொட்டு வரும் நன்னெறியேயாகும்,' என்று எடுத் துரைத்தனர். அவர்கள் மொழி கேட்ட அரசன்,